herzindagi
image

ஓவன் வேண்டாம் பணியார சட்டியில் சுவையான சாக்லேட் கேக் செய்யலாம் தெரியுமா? எளிய செய்முறை இங்கே

கேக் என்றாலே மைக்ரோஓவன் அல்லது குக்கரில் பேக் செய்தால் மட்டுமே சுவையாக இருக்கும் என்பதில்லை. மாறாக அனைவரது வீட்டிலும் இருக்கும் பணியார சட்டியை வைத்து கேக் செய்ய முடியும். எப்படி என்பது குறித்த விபரங்கள் இங்கே.  
Updated:- 2025-09-08, 13:52 IST

கேக் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ரெசிபிகளில் ஒன்றாக உள்ளது. ப்ளாக் ஃபராஸ்ட், வெண்ணிலா கேக், ஒயிட் பாரஸ்ட், ரெட் வெல்வெட், ரெயின்போ கேக் என பல வகைகளில் இருந்தாலும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது சாக்லேட் சுவைக் கொண்ட சாக்லேட் கேக் தான். அடிக்கடி பேக்கரியில் வாங்கிக் கொடுப்பது குழந்தைகளின் உடல் நலத்தைப் பாதிக்கும். வீட்டிலேயே மிகவும் எளிமையாகவும், ருசியாகவும் செய்துக் கொடுக்க விரும்பினால் இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்துங்கள். இதற்கு மைக்ரோ ஓவன் இருக்க வேண்டும் என்ற அவசயமில்லை. வீட்டில் உள்ள பணியார சட்டி ஒன்று போதும். எப்படி என கேட்கிறீர்களா? இதோ அதற்கான எளிய செய்முறை விளக்கம் இங்கே.

மேலும் படிக்க: 10 நிமிடங்களில் சுவையான சிப்பி காளான் வறுவல் செய்யலாமா? எளிய செய்முறை இங்கே!

மினி சாக்லேட் கேக் ரெசிபி:

தேவையான பொருட்கள்:

  • பால் - 2 கப்
  • சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை - 1 கப்
  • எண்ணெய் - சிறிதளவு
  • கோதுமை மாவு - 1 கப்
  • கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்
  • வெண்ணிலா எசென்ஸ் - சிறிதளவு
  • பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
  • பேக்கிங் சோடா - சிறிதளவு

மேலும் படிக்க: மழைக்கு இதமாக ஒரு கப் சூப் குடிக்க ஆசையா? இந்த சூப்களை ட்ரை பண்ணுங்க

சாக்லேட் கேக் செய்யும் முறை:

  • மினி சாக்லேட் செய்வதற்கு முதலில் மேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் 2 கப் பால், நாட்டுச்சர்க்கரை மற்றும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். ப்ளெண்டர் இருந்தால் நன்கு கலக்கிக் கொண்டால் போதும்.
  • இதனுடன் 1 கப் கோதுமை மாவு, கோ கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா போன்றவற்றைச் சேர்ந்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இறுதியாக சிறிதளவு வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து, பணியாரம் ஊற்றும் பதத்திற்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: காரசாரமான மிளகாய் வத்தல் சிக்கன் ப்ரை ரெசிபி டிப்ஸ் இங்கே.

  • பின்னர் பணியார சட்டியை சூடேற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கேக் செய்வதற்காக செய்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றிக் கொள்ளவும்.
  • பத்து முதல் 15 நிமிடங்களுக்கு அடுப்பை மிதமான சூட்டில் வேக வைத்து எடுத்தால் போதும் சுவையான மினி சாக்லேட் கேக் ரெடி.
  • மைக்ரோஓவன் இல்லை எனவும் எப்படி குக்கரில் கேக்கை பேக் செய்ய முடியாது எனவும் நினைக்கும் பெண்கள் ஒருமுறையாவது இந்த செய்முறைகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே பணியார சட்டியைப் பயன்படுத்தி இந்த கேக் செய்துப் பாருங்கள். நிச்சயம் சுவை வேற லெவலில் இருக்கும்.

இதுபோன்ற சுவாரஸ்சியமான சமையல் குறிப்புகளை அறிந்துக் கொள்ள Herzindagi தமிழுடன் இணைந்திருங்கள்.

Image credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com