herzindagi
image

குளிர்காலங்களில் அதிகமாக கால் வலி ஏற்படுகிறதா? குணப்படுத்த இந்த வீட்டு வைத்தியங்கள் போதும்!

குளிர்காலத்தில் உடலின் ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தினால் கை,கால் வீக்கம் மற்றும் மூட்டு வலி போன்ற பாதிப்புகள் அதிகளவில் ஏற்படும்.
Editorial
Updated:- 2025-11-24, 21:00 IST

தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களில கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அதீத குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது. கார்த்திகை மற்றும் தை மாதங்களில் குளிரின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த சூழலில் மழையின் தாக்கமும் அதீத குளிருக்கு ஒரு காரணமாக அமைகிறது. மற்ற பருவ காலங்களை விட குளிர்காலங்களில் உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களால் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.

குறிப்பாக ரத்த ஓட்டம் தடை படுவது முதல் உடல் வறட்சியும் அதிகரிக்கும். இதோடு கை, கால் விறைப்பு, வறட்சி மற்றும் வீக்கம் ஏற்படுவதோடு மூட்டுகளில் அதிக வலி ஏற்படும். இதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக எத்தனையோ? மருந்து மாத்திரைகள் மற்றும் தைலங்களை கால்களில் தேய்த்தாலும் வலி குறைய வாய்ப்பில்லை. குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய கால் வலியை சரி செய்ய வேண்டும் என்றால் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் சில வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம். இதோ அவற்றில் சில.

மேலும் படிக்க: அதிகரிக்கும் பசி, அதீத சோர்வு; நீரிழிவு நோயின் 5 முக்கிய அறிகுறிகள்


குளிர்காலத்தில் ஏற்படும் கால் வலியைக் குணமாக்கும் வைத்தியங்கள்:


குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய கால் வலியைக் குணமாக்க வேண்டும் என்றால், வெதுவெதுப்பான நீரைக் கொண்டு ஒத்தனம் கொடுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த தண்ணீரினுள் கால்களை கொஞ்ச நேரம் வைக்கவும். இல்லையென்றால் ஒரு காட்டன் துணியில் சூடான தண்ணீரைக் கொண்டு ஒத்தனம் கொடுக்கவும். சூடான நீர் கால்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தைக் குறைப்பதோடு மனதிற்கு நல்ல ரிலாக்ஸையும் கொடுக்கிறது. இரவு நேரங்களில் இவ்வாறு செய்யும் போது வலிகள் குறைந்து நல்ல தூக்கம் ஏற்பட உதவுகிறது.

மேலும் படிக்க: உடல் மெலிவாக காணப்படுகிறீர்களா? ஆரோக்கியமாக எடையை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்

குளிர்ந்த வானிலை நிலவும் போது அதிக வியர்வை வெளியேறாது. தாகம் குறைவாக எடுப்பதால் அதிகமாக தண்ணீரைக் குடிக்க மாட்டோம். உடலின் நீர்ச்சத்துக்கள் குறைவாக இருக்கும் போது தலைவலி உள்ளிட்ட பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். எனவே கால்கள் மற்றும் கைகளில் ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க வேண்டும் என்றால் உடலுக்குப் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

கால்களில் ஏற்படக்கூடிய அதீத வலியைக் குறைக்க வேண்டும் என்றால் கடுகு எண்ணெய்யை கொஞ்சமாக சூடாக்கி கால்களில் நன்கு தேய்க்கவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கால்களில் ஏற்படக்கூடிய வலியைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவுகிறது.

கால் வலி அதிகம் உள்ள இடங்களில் அதன் வலியைக் குறைக்க வேண்டும் என்றால், ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்தவும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் உடலில் ஏற்படும் ஆக்சிடேட்டிங் ஸ்டிரஸ்ஸைக் குறைத்துக் கொள்வதோடு கால் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க: வயிறு உபாதையின் போது நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

குளிர்காலத்தில் குளிருக்கு இதமாக ஆடைகளை அணிய வேண்டும் என்று நினைப்போம். அதற்காக மிகவும் இறுக்கலான ஆடைகளை அணியக்கூடாது. மிகவும் இறுக்கமான ஆடைகள் உடலின் ரத்த ஓட்டத்தைத் தடை செய்வதோடு கால்களில் வீக்கம் ஏற்படவும் உதவுகிறது. எனவே முடிந்தவரை குளிருக்கு இதமாக ஆடைகள் அணிவதோடு கொஞ்சம் இறுக்கமான ஆடைகள் அணிவதையும் தவிர்க்க வேண்டும்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com