
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எப்பொழுதாவது நொறுக்குத் தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். ஆனால் அனைத்து நேரங்களிலும் வீடுகளில் ஸ்நாக்ஸ் இருக்க வாய்ப்பில்லை. இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் அரிசி, பொரிகடலை போன்றவற்றைச் சாப்பிடுவோம். இல்லையென்றால் கடைகளுக்குச் சென்று மிக்சர், சேவு, சீவல், கடலைப்பருப்பு, ஏதாவது இனிப்பு வகைகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகளவில் உள்ளது. அனைத்து நேரங்களிலும் கடைகளில் வாங்கிச் சாப்பிட முடியாது. அதிகளவு கடைகளில் வாங்கிச் சாப்பிடும் போது உடலுக்குக் கேடு விளைவிக்கும். இந்த நேரத்தில் ஆரோக்கியமாக ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் ஒருமுறையாவது வீட்டில் பனீர் கட்லெட் செய்துப் பாருங்கள்.
பள்ளி முடித்து விட்டு வீடு திரும்பும் குழந்தைகள், வந்தவுடன் என்ன சாப்பிடலாம்? என்ற தேடலுடன் வருவார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு பனீர் கட்லெட் செய்துக் கொடுக்கலாம். அதிக நேரம் எடுக்காது. வெறும் 30 நிமிடங்கள் வீட்டிலேயே நாவூறும் சுவையில் ஆரோக்கியமான பனீர் கட்லெட் செய்து விடலாம். இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக..
மேலும் படிக்க: தக்காளியில் பாயாசம் செய்யலாம் தெரியுமா? எளிய செய்முறை விளக்கம் இங்கே!
மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த புதினா சாமை வடை செய்முறை!
மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி; சுலபமான முறையில் செய்யும் முறை இதோ!
பனீரில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளதால் உடலில் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்தி எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் புரதம், கால்சியம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு வலுச்சேர்க்கிறது. பனீரில் உள்ள ஜிங்கள் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் குழந்தைகளின் ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களைக் கொண்ட பனீரை உணவு முறையில் சேர்த்துக்கொள்ளும் போது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் நினைவாற்றல் இழப்பைக் கட்டுப்படுத்தும் பொட்டாசியம் சத்துக்கள் பனீரில் உள்ளது. அப்புறம் என்ன? இதுபோன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பனீரை வாரத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com