-1764610430351.webp)
தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளில் டிட்வா புயல் காரணமாக லேசானது முதல் கனமழை பெய்துவருகிறது. தொடர்ச்சியாக மழைப்பொழிவு ஏற்படும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளால் அவதிப்படக்கூடும். இதை சரி செய்வதற்கு என்ன தான் மாத்திரைகள் உட்கொண்டாலும் தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு பாடாய்படுத்திவிட்டு சென்றுவிடும். எனவே தான் மழைக்காலம் ஆரம்பித்தாலே வழக்கமான டீ, காபி குடிப்பதற்குப் பதிலாக கொஞ்சம் மூலிகைகளைக் கொண்டு டீ செய்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஆம் மூலிகை தேநீரைப் பருகும் போது அதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வாரி வழங்குகிறது. இன்றைக்கு மழைக்காலம் வந்தாலே ஏன் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது? இருமல் வரக்காரணம் என்ன? இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் இங்கே..
அக்டோபர் தொடங்கி பிப்ரவரி வரை மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு குளிரும் மக்களை வாட்டி வதைக்கும். இதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம். ஆம் பருவமழை காலங்களில் அதிக ஈரப்பதம் இருப்பதால், வைரஸ் தொற்றுகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவாக அமையக்கூடும். இதோடு மட்டுமின்றி இந்த வைரஸ் தொற்றுகளால் சுவாசப்பாதையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதை சரி செய்ய வேண்டும் என்றால், மழைக்காலங்களில் குளிருக்கு இதமான சூடான மூலிகை தேநீர் பருகுவது நல்லது.
மேலும் படிக்க: தூங்கச் செல்வதற்கு முன்ளதாக ஒரு டம்ளர் பால் போதும்; உடல் ஆரோக்கியம் மேம்படும்! எப்படி தெரியுமா?
துளசி மற்றும் சில மசாலாப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் மூலிகை டீ உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு ஆற்றலையும் வழங்குகிறது.
மேலும் படிக்க: புரதம் முதல் புரோபயாடிக்ஸ் வரை; தயிர் சாப்பிடுவதற்கான முக்கிய காரணங்கள்
சளி தொல்லைப் போக்கும் மூலிகை தேநீரைச் செய்ய வேண்டும் என்றால், முதலில் ஒரு பாத்திரத்தில் துளசி இலைகள், இலவங்கப்பட்டை, மிளகுத்தூள், கிராம்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
மேலும் படிக்க: அடிக்கிற குளிரிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்புடன் வைத்திருக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டியது இவை தான்!
ஒரு 15 நிமிடங்களுக்குள் தண்ணீர் நன்கு கொதித்துவிடும். இதன் பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டிக் குடிக்கலாம். குழந்தைகளுக்கு இந்த பானம் போதுமானது. ஒருவேளை உங்களுக்கு அதிக இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தால் கொஞ்சமாக காட்டமாக இருப்பதற்கு ஏற்ற வகையில் இஞ்சி மற்றும் கடுக்காய் பொடி சேர்த்துக் குடிப்பது நல்லது. இதே போன்று கற்பூரவல்லி .இலைகளையும் நன்கு கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகுவது உடல் ஆற்றலை அளிக்கிறது. சளி, இருமல் போன்ற பாதிப்பிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கிறது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com