herzindagi
image

Winter Skin Care: குளிர்கால ஸ்பெஷல்; முகப் பொலிவைத் தரக்கூடிய நெல்லிக்காய் மிட்டாய் எப்படி செய்யணும் தெரியுமா?

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை எப்போதும் இளமையாகவும், முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. வெயில்காலங்களில் ம்ட்டுமல்ல குளிர்காலங்களிலும் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு சருமத்தையும் பொலிவாக்குகிறது.
Editorial
Updated:- 2025-12-16, 13:39 IST


தமிழகத்தைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் குளிர் வாட்டி வதைக்கிறது. மழைச்சாரல் போன்று பனிச்சாரல் பொழியும் அளவிற்கு இந்தாண்டு குளிரின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தால் உடல் நல பாதிப்பு மட்டுமல்ல சரும பிரச்சனைகள் பலவும் ஏற்படுகிறது. குறிப்பாக குளிர்ந்த காற்று சருமத்தை வறண்டு விட செய்கிறது. கருந்திட்டுக்கள், முகப்பருக்கள் போன்ற பாதிப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. இவற்றிற்கெல்லாம் எளிய முறையில் தீர்வு காண வேண்டும் என்று நினைத்தால் நெல்லிக்காய் சிறந்த தேர்வாக உள்ளது. ஆம் நெல்லிக்காய் ஒரு சிறந்த உணவாக மட்டுமில்லாது, இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் சருமத்திற்கு பல வகைகளில் நன்மைகளைத் தருகிறது. ஆனால் என்ன அனைவருக்கும் நெல்லிக்காயைத் தினமும் சாப்பிடுவது பிடிக்காது. இதற்கு என்ன செய்யலாம் என்ற தேடலில் இருந்தால்? நெல்லிக்காயைப் பயன்படுத்தி ஒரு முறையாவது மிட்டாய் செய்து சாப்பிடுங்கள். இதோ எப்படி என்பது குறித்த விபரங்கள் இங்கே.

சருமத்தைப் பொலிவாக்கும் நெல்லிக்காய் மிட்டாய்:

  • நெல்லிக்காய் - 5
  • கேரட் - 1 கப்
  • பீட்ரூட் - 1 கப்
  • உப்பு - சிறிதளவு
  • சோளமாவு - 1 டீஸ்பூன்
  • நெய் - சிறிதளவு
  • சாட் மசாலா - சிறிதளவு

மேலும் படிக்க: Winter Skin Care: குளிர்காலத்தில் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும் 5 கடலை மாவு ஃபேஸ் பேக்

நெல்லிக்காய் மிட்டாய் செய்முறை:

  • இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் நெல்லிக்காய், கேரட், பீட்ரூட் போன்றவற்றை ஒரு 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  • பின்னர் நெல்லிக்காயில் உள்ள விதைகளை அகற்றி விட்டு, கேரட், பீட்ரூட் போன்றவற்றையும் உடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: Papaya Face Pack: குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு விடுகிறதா? பப்பாளி பேஸ் பேக்கைப் பயன்படுத்திப் பாருங்கள்!

  • இதையடுத்து ஒரு கடாயை சூடேற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் கலவையை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
  • சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, சாட் மசாலா போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். சில நிமிடங்களுக்குப் பிறகு இதனுடன் கரைத்து வைத்துள்ள சோளமாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • கொஞ்சம் கெட்டியாகும் பதத்திற்கு வந்ததும் சிறிதளவு நெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கி விடவும். மிதமான சூட்டில் உருண்டையாக பிடித்து எடுத்தால் போதும். கொஞ்சம் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்றால் மாவில் உருட்டிவிடவும். அவ்வளவு தான் சுவையான மற்றும் சருமத்தைப் பாதுகாக்கும் நெல்லிக்காய் மிட்டாய் ரெடி.
  • இதை காற்றுபபுகாத கண்ணாடி ஜாடியில் சேமித்து வைக்கவும். 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதையடுத்து குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டும் என்றால், தினமும் காலை வெறும் வயிற்றில் 1 அல்லது 2 மிட்டாய்களைச் சாப்பிடலாம்.

மேலும் படிக்க: Banana Feel For Face: வாழைப்பழத் தோலை இனி தூக்கி வீசாதீங்க;  இப்படி பயன்படுத்துங்க  எந்த வயதிலும் இளமையுடன் இருக்கலாம்!

நெல்லிக்காயில் உள்ள பிற நன்மைகள்:

சருமத்திற்கு மட்டுமல்ல நெல்லிக்காயை பல வழிமுறைகளில் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது முடி உதிர்தல் குறைகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. சர்க்கரை நோய் மற்றும் பிசிஓஎஸ் பாதிப்புள்ளவர்கள் கட்டாயம் நெல்லிக்காயைச் சாப்பிடுவது நல்லது.

Image source - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com