herzindagi
image

குளிர்காலத்தில் உடலைப் பாதுகாப்புடன் வைத்திருக்க பீட்ரூட் எப்படி உதவுகிறது தெரியுமா?

பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள், இரும்புச்சத்துகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு குளிர்காலத்தில் உடலுக்குத் தேவையான வெப்பநிலையையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.
Editorial
Updated:- 2025-11-21, 21:46 IST


குளிர்காலம் வந்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்ற பல்வேறு பருவ காலத் தொற்றுகளால் பாதிக்கப்படுவார்கள். இதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவுடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்துள்ள காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என்பார்கள். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, வெண்டைக்காய், சுரக்காய் போன்ற பல்வேறு காய்கறிகள் இருந்தாலும் குளர்காலத்தில் உடலைப் பாதுகாப்புடன் வைத்திருக்க பீட்ரூட் மிகவும் உதவியாக உள்ளது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

குளிர்காலத்தில் உடலைப் பாதுகாக்கும் பீட்ரூட்:

  • பீட்ரூட்டில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, போலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • பீட்டாலைன்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பீட்ரூட்டில் அதிகம் உள்ளதால் உடல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் உடல் சோர்வாகிறதா? கர்ப்பிணிகள் மறக்காமல் இந்த உணவுகளைச் சாப்பிடுங்க!

  • பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் இருப்பதால் இதய நலனை பாதுகாப்பதோடு, குளிர்காலத்தில் உடலில் ஆக்ஸிஜன் சீராக உடல் உறுப்புகளுக்குச் செல்வதற்கு உதவுகிறது.
  • வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் கொண்ட பீட்ரூட் அதிகளவில் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் சோர்வடைவதைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையாமலும் பாதுகாக்கிறது.
  • பீட்ரூட்டிலுள்ள வைட்டமின் சி, ஃபோலேட், இரும்புச்சத்து போன்றவை குளிர்காலத்தில் வரும் தும்மல், சளி, இருமல் போன்றவற்றிலிருந்தும் நம் உடலைக் காக்கும். குறிப்பாக வைட்டமின் சி, கொலேஜனை தயாரிப்பதால் சரும வறட்சியைத் தடுக்கிறது.
  • குளிர்காலத்தில் அதிகமாக உணவுகளைச் சாப்பிட முடியாது. கொஞ்சமாக சாப்பிட்டாலும் உடலின் செரிமான அமைப்பு சீராக இருக்காது. நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட பீட்ரூட்டை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது செரிமான அமைப்பை சீராக்குவதோடு, மலச்சிக்கலையும் தடுக்க உதவுகிறது.

மேலும் படிக்க: குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் ஒமேகா-3 நிறைந்த சைவ உணவுகள்

  • குளிர்ந்த காற்றால் சருமம் மிகவும் வறண்டு விடக்கூடும். இதிலிருந்து முகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் வைட்டமின் சி அதிகம் நிறைந்த பீட்ரூட்டை உணவு முறையில் சேர்த்துக்கொள்ளலாம். கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com