herzindagi
image

ஆரோக்கியம் நிறைந்த புதினா சாமை வடை செய்முறை!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்துள்ள ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு உகந்தாக உள்ளது புதினா மற்றும் சாமை அரிசியைக் கொண்டு செய்யப்படும் புதினா சாமை வடை.
Editorial
Updated:- 2025-10-31, 23:53 IST

குழந்தைகளுக்கு வீட்டில் நொறுக்குத் தீனிகள் இல்லையென்றால் அவர்களது அம்மாக்களைத் தொந்தரவு செய்துவிடுவார்கள். வலுக்கட்டாயமாக கடைகளுக்கு இழுத்துச் சென்று வேண்டும் என்கிற அனைத்துத் திண்பண்டங்களை வாங்கித் தர சொல்லுவார்கள். இப்படி ருசிக்காக சாப்பிடுவது ஒருபுறம் இருந்தாலும், இன்றைய சூழலில் ஆரோக்கிய நிறைந்த உணவுப்பொருள்களைச் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நீங்களும் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த திண்பண்டங்கள் செய்ய வேண்டும் என்றால் சாமை மற்றும் புதினா கொண்டு செய்யப்படும் புதினா சாமை வடையை செய்து சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க: ஆறு மாத குழந்தைகளுக்குக் கட்டாயம் இந்த உணவுகளைக் கொடுத்திடுங்க;  முழு விபரம் இங்கே

புதினா சாமை வடை:

தேவையான பொருள்கள்:

  • சாமை அரிசி மாவு - 2 கப்
  • பசசரிசி மாவு - 2 கப்
  • பொரிகடலை - அரை கப்
  • பாசிப்பருப்பு - அரை கப்
  • புதினா - ஒரு கைப்பிடி அளவு
  • மிளகாள் வத்தல் - 6
  • சீரகம் - சிறிதளவு
  • பூண்டு - 2
  • பெருங்காயம் - சிறிதளவு
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • தண்ணீர் - போதுமான அளவு 

மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி; சுலபமான முறையில் செய்யும் முறை இதோ!


புதினா சாமை வடை செய்முறை:

  • ஆரோக்கியம் நிறைந்த புதினா சாமை வடை செய்வதற்கு முதலில் சாமை அரிசி மற்றும் பச்சரிசியை தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு பொரிகடலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், பூண்டு, பெருங்காயம், போன்றவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து புதினா இலைகளையும் தனியாக அரைத்து வடிகட்டி கொள்ளவும். இதையடுத்து அரைத்து வைத்துள்ள மாவுடன் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பிழியும் பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

  • இதனுடன் அரைத்து வைத்துள்ள சீரக விழுது மற்றும் புதினா சாறை சேர்த்து மாவு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
  • இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை வடைபோன்று தட்டிப் போடவும். இரண்டு புறமும் நன்கு வெந்தால் போதும் சுவையான புதினா சாமை வடை ரெடி.

Image Source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com