குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ரெசிபி கொடுக்க விருப்பமா? மக்காச்சோள வடை ட்ரை பண்ணுங்க

குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு அம்மாக்களும் இருக்கும். ஆனால் என்ன நம்முடைய குழந்தைகளோ? ககைடளில் கலர்புல்லாக விற்பனையாகும் தின்பண்டங்கள் மீது தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குழந்தைகள் அதிக ஆசைப்படுகிறார்கள் என பெற்றோர்கள் வாங்கிக் கொடுப்பதால் பல உடல் நல பிரச்சனைகளை உடன் சந்திக்க நேரிடுகிறது. இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் ஒன்று தான் குழந்தைகளுக்கு ஆற்றலை அளிக்கும் மக்காச்சோள வடை ரெசிபி.
image

குழந்தைகள் விரும்பியதை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இருப்பது இயல்பான ஒன்று. அதற்காக கிடைத்த கண்களைக் கவரக்கூடிய அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொடுப்பது என்பது தவறான செயல். இது குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு அவர்களின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிப்பதாக அமையும். இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும் என்றால் சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இந்த வரிசையில் இன்றைக்கு மக்காச்சோள வடையை குழந்தைகளுக்குக் கொடுக்கவும். இதை முயற்சி செய்யவில்லையென்றால் உங்களுக்கான ரெசிபி டிப்ஸ் இங்கே.

குழந்தைகள் விரும்பும் மக்காச்சோள வடை:

பள்ளி முடிந்தும் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் அம்மாக்கள் பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த மக்காச்சோளத்தை வைத்து வடை செய்துக் கொடுக்கவும். இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்த விபரம்.

தேவையான பொருட்கள்:

  • மக்காச்சோளம் - 100 கிராம்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • பச்சை மிளகாய்- 5
  • இஞ்சி - சிறிதளவு
  • சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு - சிறிதளவு
  • உப்பு - சுவைக்கு ஏற்ப

மேலும் படிக்க:பலாக்கொட்டையில் மில்க் ஷேக்: சிம்பிள் ரெசிபி மேக்கிங் டிப்ஸ்கள்

மக்காச்சோள வடை செய்முறை:

  • ஆரோக்கியம் நிறைந்த மக்காச்சோள வடை செய்வதற்கு முதலில் அனைத்துப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் மக்காச்சோளம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மக்காச்சோள விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி இதனுடன் சீரகம் மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.

இதையடுத்து வழக்கம் போல பருப்பு வடைக்கு எப்படி தட்டி போடுவோமோ? அந்தளவிற்கு எண்ணெய்யை சூடாக்கி அதில் தட்டி போட்டு எடுத்தால் போதும் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த மக்காச்சோள வடை ரெடி. இதற்கு தக்காளி சட்னி, மல்லி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்கள். நிச்சயம் சுவை வேற லெவலில் இருக்கும். இனி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ரெசிபிகள் செய்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த வடையை ட்ரை பண்ணிப்பாருங்கள்.

மேலும் படிக்க:சர்க்கரை தேவையில்லை, சுவையான பேரீச்சம்பழ ஓட்ஸ் லட்டு செய்வது எப்படி? ரெசிபி இதோ

corn

மக்காச்சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

மக்காச்சோளத்தில் பொட்டாசியம் போன்ற தாதுக்கள், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, தயாமின் மற்றும் நியாசின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு நாள் முழுவதும் உங்களுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP