herzindagi
image

TVK Maanadu in Madurai: பிரமாண்டமாக தவெக 2வது மாநாட்டில் அரங்கம் அதிர பேசிய விஜய்

பல லட்சம் மக்கள் கூட்டத்துடன் மதுரையில் இன்று தொடங்கிய 2வது மாநாட்டில். விஜயின் பேச்சை கேட்டு மக்கள் அரங்கத்தை அதிரவைத்து கொண்டாடி தீர்த்தனர். அப்படி என்ன மக்கள் இடத்தில் விஜய் பேசினார் என்பதை பார்க்கலாம்.  
Editorial
Updated:- 2025-08-21, 19:57 IST

விஜயின் அரசியல் கட்சியான தவெகவின் இரண்டாவது மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. நேற்றிலிருந்தே மக்கள் மாநாட்டில் பங்குபெறப் பல ஊருகளில் இருந்தே மதுரைக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என 3 இடங்களில் பிரமாண்டமாக வாகனங்கள் பார்க்கிங் செய்ய இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், மதுரையில் இன்று ஆர்ப்பரித்து சென்ற மக்களின் கூட்டத்தால் பார்க்கிங் செய்ய ஒதுக்கப்பட்ட இடங்களையும் மீறி, பல கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது என கூறப்படுகிறது.  தவெக கட்சிக்கு மக்களிடம் பிரமாண்டமான வரவேற்பு இருக்கிறது என இதன் மூலம் தெரிகிறது. 

மேடைக்கு வந்த விஜய்

 

சும்மார் மாலை 4 மணி அளவில் மேடைக்கு வந்த விஜய், தனது கட்சியினரை ஆரத்தழுவியும், கை குலுக்கியும் வரவேற்றார். பின்னர், தந்தையையும், தாயையும் கட்டி அனைத்து வாழ்த்துக்களைப் பெற்றார். அதன்பின், மேடையிலிருந்து தனது தொண்டர்களை பார்த்தபடி கை அசைத்து முன்சென்ற விஜயை பார்த்து மக்கள் உற்சாகம் அடைந்தனர். மக்களை பார்த்தபடி சென்ற விஜய்க்கு தொண்டர்கள் தவெக கட்சி கொடியை மலர் தூவுவது போல் தூவினர்.

vijay TVK  in madurai 1

 

மேலும் படிக்க: கண் இமைக்கும் நேரத்தில் விற்றுத்தீர்த்த தீபாவளி ரெயில் டிக்கெட்.. இனி இந்த தேதியில் முன்பதிவு செய்யலாம்

 

சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோமீட்டர் கேட்கும்

 

மாநாட்டில் பேசிய விஜய், “காட்டில் சிங்கம் தனித்துவம் வாய்ந்தது, சிங்கம் கர்ஜனையானது 8 கிலோமீட்டர் அளவிற்கு எதிரொலிக்கச் செய்யும். அப்படிப்பட்ட சிங்கம் வெளியே வந்தால் அது வேட்டைக்காக மட்டும் தான் இருக்கும், சும்மா வேடிக்கை பார்க்க வெளியே வராது. என சிங்கத்தை ஒப்பிட்டு தனது அரசியல் வாழ்க்கை குறிப்பிட்டு சொன்னார். அதேபோல் மதுரை மாநாட்டில் பேசிய விஜய் “எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை, எம்ஜிஆரை போல் மனம் கொண்ட மதுரை மைந்தன் கேப்டன் விஜயகாந்த்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு என கிடைத்தது என மதுரை மண்ணின் பெருமையை பேசினார்.

விஜயின் அரசியால் எதிரி

 

இன்று மதுரையில் நடைபெற்ற 2வது மாநாட்டில் பேசிய விஜய், அரசியல் நேரடி எதிரிகளாக பாஜக மற்றும் திமுகவை குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டு என விஜய் கூறியுள்ளார். விஜயின் அரசியல் பேச்சை கேட்டு தொண்டர்கள் உற்சாகத்தில் மூழ்கினர்.

vijay TVK  in madurai 2

 

மேலும் படிக்க: நீதா அம்பானியின் கார் விலை இவ்வளவா? இந்தியாவிலேயே இவரிடம் மட்டும் தான் இந்த ஆடி கார் உள்ளது!

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com