herzindagi
image

Vishwambhara glimpse: பிரம்மாண்டத்தின் உச்சம்; அதிரடி காட்டும் சிரஞ்சீவி: கவனம் ஈர்க்கும் விஷ்வாம்பரா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ

Vishwambhara glimpse: சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் விஷ்வாம்பரா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஃபேண்டசி பாணியில் அமைந்துள்ள இந்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Editorial
Updated:- 2025-08-21, 19:18 IST

Vishwambhara glimpse: தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகராக விளங்கி வரும் சிரஞ்சீவியின் விஷ்வாம்பரா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நாளை சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழுவினர் சார்பில் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கூலி திரைப்படத்தில் கல்யாணியாக கலக்கிய நாயகி; யார் இந்த ரச்சிதா ராம்?

 

உச்ச நட்சத்திரமாக விளங்கும் சிரஞ்சீவி:

 

தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சிரஞ்சீவி. தற்போது எத்தனையோ இளம் தலைமுறை நாயகர்கள் சினிமா உலகில் சிறந்து விளங்கினாலும், இன்றளவும் கூட சிரஞ்சீவியின் ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கூட குறையவில்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ஒரு உயரத்தை சிரஞ்சீவி அடைந்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

 

கடந்த 1978-ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கிய சிரஞ்சீவி, ஆரம்ப காலத்தில் துணை நடிகர், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர், நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்த சிரஞ்சீவிக்கு, 1983-ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. அதுவரை வெளியான படங்களின் வசூலை முறியடித்து இப்படம் சாதனை படைத்தது. இதன் மூலம் தெலுங்கு சினிமாவின் நட்சத்திர அந்தஸ்தை சிரஞ்சீவி எட்டிப் பிடித்தார்.

Vishwambhara

 

சிரஞ்சீவியின் சாதனைகள்:

 

இதன் பின்னர், அதிகப்படியான வெற்றி படங்களில் சிரஞ்சீவி நடித்துள்ளார். குறிப்பாக, பசிவாதி ப்ராணம், யமதுகி மொகுடு, கேங் லீடர், கரானா மொகுடு போன்ற பல படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அந்த காலகட்டத்தில் முதன் முதலாக ரூ. 1 கோடி சம்பளம் பெற்ற நடிகராக சிரஞ்சீவி இருந்தார் என்று கூறப்படுகிறது. எத்தனையோ மாஸ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தனது நடிப்பு மூலம் தனி முத்திரையை பதிக்கவும் சிரஞ்சீவி தவறவில்லை.

மேலும் படிக்க: Coolie Vs War 2 box office collection: வசூலில் வார் 2-வை முந்தியதா கூலி? பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் முழு விவரம் இதோ!

 

இதன் விளைவாக, ரகுபதி வெங்கையா விருது, நந்தி விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் என எத்தனையோ விருதுகளை சிரஞ்சீவி வென்றுள்ளார். தமிழில், ராணுவ வீரன், மாப்பிள்ளை போன்ற சில படங்களில் மட்டுமே ஒரு சில காட்சிகளில் சிரஞ்சீவி நடித்துள்ளார். எனினும், தெலுங்கு போலவே தமிழிலும் சிரஞ்சீவிக்கு கணிசமான அளவு ரசிகர்கள் உள்ளனர். இப்படி பல்வேறு சாதனைகளை சிரஞ்சீவி படைத்துள்ளார்.

 

விஷ்வாம்பரா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ:

 

இப்படி பல தசாப்தங்களை கடந்து இன்றளவும் கூட ஹீரோவாக திரையில் மிளிர்கிறார் சிரஞ்சீவி. இந்நிலையில், நாளை சிரஞ்சீவியின் பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, சிரஞ்சீவி நடித்து வரும் விஷ்வாம்பரா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. வசிஷ்டா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீரவாணி இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா, குனால் கபூர், இஷா சாவ்லா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Chiranjeevi movie

 

ஃபேண்டசி பாணியிலான கதைக்களத்தில் எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம், வரும் 2026-ஆம் ஆண்டில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைக் காண தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Youtube

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com