herzindagi
image

முக பொலிவிற்கு எப்படியெல்லாம் பால் உதவியாக உள்ளது தெரியுமா?

பெண்களின் முக அழகு என்பது அவர்களின் உடல் நலத்துடன் தொடர்புடையது. இதற்கு விலையுயர்ந்த அழகு சாதனப் பொருள்கள் எல்லாம் தேவைப்படாது. வீட்டில் இருக்கும் மஞ்சள், பால் போன்ற பொருள்கள் போதும்.  
Editorial
Updated:- 2025-08-21, 21:39 IST

பெண்கள் எப்போதும் தங்களது சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அழகு நிலையங்களுக்குச் செல்வது ஒருபுறம் இருந்தாலும் சில பெண்கள் தங்களது வீட்டில் கிடைக்கும் மஞ்சள், கடலை மாவு, தேன், அரிசி மாவு போன்ற பொருட்களை வைத்து தங்களை அழகுப்படுத்திக் கொள்ள முயல்வார்கள். இந்த வரிசையில் சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க பால் உதவியாக இருக்கும். இதில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள சரும செல்களை அகற்றுவதற்கு உதவுகிறது. இதை உபயோகிக்க வேண்டும்? என்பது குறித்த தகவல்களை இங்கே அறிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க: சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க கிரீன் டீயை பயன்படுத்தும் எளிய முறைகள்

முக அழகிற்கு உதவும் பால்:

பால் கிளென்சர்:

முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு பச்சை பாலைக் கொண்டு முகத்தில் கிளென்சர் செய்யலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு காட்டன் துணியைக் கொண்டு முகத்தில் அப்ளை செய்து கொஞ்சம் மசாஜ் செய்யவும். பின்னர் 5 - 10 நிமிடங்களுக்குப் பின்னதாக குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும் சருமம் எப்போதும் பொலிவுடன் இருக்கும். இவை முகத்தில் உள்ள மாசுக்களை நீக்கி எப்போதும் அழகாக வைத்திருக்க உதவும்.

மேலும் படிக்க: சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த ஆயுர்வேத ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க


பால் மற்றும் தேன்:

அடுத்ததாக பெண்கள் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க பால் மற்றும் தேன் கலந்து பேஸ் மாஸ்க் போன்று உபயோகிக்கலாம். ஒரு பவுலில் சிறிதளவு பால் மற்றும் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்களுக்குப் பின்னதாக மிதமான சூட்டில் முகத்தைக் கழுவினால் போதும். முகம் எப்போதும் பொலிவுடன் காணப்படும்.

பால் மற்றும் கடலை மாவு:

பெண்கள் மிகவும் எளிமையாக முறையில் முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்றால் பாலுடன் கடலை மாவு கலந்து பேஸ் பேக் செய்யலாம். பால் மற்றும் கடலை மாவு இரண்டையும் கலந்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்துவிட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கருமை நீக்கி முகத்தைப் பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க: இந்த எண்ணெய் மட்டும் தான் தலை முடிக்கு யூஸ் பண்ணுவேன்; சீக்ரெட் உடைத்த ஸ்ருதி ஹாசன்

அப்புறம் என்ன? இனி முகத்தை அழகுப்படுத்துவதற்கு விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். அதற்கு மாற்றாக எளிதில் கிடைக்கும் பாலை பல்வேறு வழிமுறைகளில் பயன்படுத்தி முகத்தைப் பொலிவாக்க முயற்சி செய்யுங்கள்.

Image credit - Freep

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com