குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்சாப்பிடக்கூடிய பழ வகைகளில் ஒன்றாக இருப்பது பலாப்பழம். வெளியில் பார்ப்பதற்கு முள் போன்று தெரிந்தாலும் உள்ளே பழத்தின் சுவையை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. வேண்டாம் என்று சொன்னாலும் சாப்பிட சாப்பிட இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று தான் மனம் விரும்பும். அந்தளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த பழங்கள் மட்டுமல்ல, இதில் உள்ள விதைகளும் அதாவது பலாக்கொட்டையையும் வேகவைத்தோ? அல்லது குழம்புகளில் போட்டு சாப்பிடுவார்கள். இந்த வரிசையில் இன்றைக்கு பலாக்கொட்டைகளை வைத்து குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் எப்படி பலாக்கொட்டை மில்க் ஷேக் செய்வது என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
குழந்தைகள் விரும்பும் பலாக்கொட்டை மில்க் ஷேக்:
பலாக்கொட்டைகளை வேண்டாம் என்று கூறும் குழந்தைகள் கூட அதை வைத்து மில்க் ஷேக் செய்துக் கொடுத்தால் நிச்சயம் சாப்பிடுவார்கள். முதலில் இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- பலாக்கொட்டை - 10
- சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
- வெண்ணிலா எசென்ஸ்
- வெண்ணிலா ஐஸ்கிரீம்
- பால் - 2 கப்
மேலும் படிக்க:கர்நாடகா ஸ்பெஷல் ஷாவிகே பாத்; அற்புதமான பிரேக் பாஸ்ட் ரெசிபி
பலாக்கொட்டை மில்க் ஷேக் செய்முறை:
- பலாக்கொட்டை வைத்து மில்க் செய்வதற்கு முன்னதாக முதலில் இதன் மேல் தோலை உரித்து குக்கர் அல்லது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.
மேலும் படிக்க:இட்லி பிரியர்களாக நீங்கள்? அப்ப இந்த ஆரோக்கிய நன்மைகளை நிச்சயம் பெறுவீர்கள்!
- வேக வைத்த பின்னதாக அந்த தோலையும் உரித்து விட்டு சர்க்கரை மற்றும் பால் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். லேசாக அரைப்படவுடன் சுவைக்காக சிறிதளவு வெண்ணிலா எசென்ஸ் மற்றும் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் அதை ஒரு பவுல் அல்லது டம்ளரில் மாற்றிக் கொள்ளவும். மீதமுள்ள பாலையும் சேர்த்து லேசாக கிளறிவிட்ட பின்னதாக எப்போதும் போல மில்க் ஷேக்கிற்கு வெண்ணிலா ஐஸ்கிரீம் பயன்படுத்தவும்.

மேலும் படிக்க:சர்க்கரை தேவையில்லை, சுவையான பேரீச்சம்பழ ஓட்ஸ் லட்டு செய்வது எப்படி? ரெசிபி இதோ
- இறுதியாக பாதாம், மாதுளை போன்ற பழங்களை மேல் தூவி அலங்கரித்துவிட்டு குழந்தைகளுக்குப் பரிமாறவும். நிச்சயம் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
- இறுதியாக பாதாம், மாதுளை போன்ற பழங்களை மேல் தூவி அலங்கரித்துவிட்டு குழந்தைகளுக்குப் பரிமாறவும். நிச்சயம் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation