Onam Snacks : நாவூரும் சுவையில், கேரளாவின் 3 ஸ்பெஷல் ஸ்னாக்ஸ் ரெசிபிகள்!

பழம் பொரி தொடங்கி நெய் அப்பம் வரை கேரளாவில் பரிமாறப்படும் ஒவ்வொரு பலகாரங்களிலும் தனித்துவமான சுவையும் மணமும் நிறைந்திருக்கும்…

onam special nei appam pazham pori

மகிழ்ச்சி மற்றும் அன்பை பரிமாறும் வகையில் எல்லா மாநிலங்களிலும் பண்டிகைகள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஓணமும் ஒன்று. வருகிற ஓணம் திருநாளன்று கேரளாவில் பிரசித்தி பெற்ற உணவுகளை சமைத்து உண்டு மகிழுங்கள்.

ஒரு சில மாநில உணவுகள் உலகெங்கிலும் புகழ்பெற்றதாக இருக்கும். அப்படி உலகெங்கிலும் மிகவும் பிரபலமான 3 கேரள நாட்டு சிற்றுண்டிகளை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். நீங்கள் எந்த ஊரில் இந்த உணவுகளை சமைத்தாலும் சரி, கேரள நாட்டின் மணம் உங்கள் வீடெங்கிலும் நிறைந்திருக்கும்.

நெய் அப்பம்

ஒரு கப் பச்சரிசிக்கு சமமான அளவு வெல்லம் எடுத்துக் கொள்ளுங்கள். அரிசியை 3 மணி நேரங்களுக்கு ஊற வைத்து கொள்ளவும். பின்னர் அரிசியுடன், துருவிய வெல்லம், ஏலக்காய் வாழைப்பழம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். நீங்கள் விரும்பினால் இதில் நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகளையும் சேர்க்கலாம்.

பணியார கல்லை சூடாக்கி, சிறிய அப்பம்/பணியாரங்களாக ஊற்றி நல்ல பொன் மொறுவலாக நிறம் மாறும் வரை சுட்டெடுக்கவும். இந்த அப்பம் செய்வதற்கு நெய் பயன்படுத்தினால் மட்டுமே நெய் அப்பத்தின் பாரம்பரிய சுவையை பெற முடியும்.

பழம் பொரி

onam special pazham pori

ஒரு கப் அரிசி மாவுடன் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். நேந்திரன் வாழைபழங்களை பஜ்ஜி செய்வதற்கு ஏற்ற வகையில் சீவி கொள்ளவும். இதை தயாராக வைத்துள்ள மைதா கலவையில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் சூப்பரான பழம் பொரி தயார்.

இலை அடை

onam special elai adai

வெள்ளத்துடன் தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும். இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து பூரணம் செய்து தயாராக வைக்கவும்.

வெளிப்புற மாவு செய்வதற்கு அரிசி மாவுடன் நெய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, இதில் கொஞ்சம் கொஞ்சமா சூடான தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு வாழை இலையை குட்டி சதுரங்கங்களாக வெட்டி நெருப்பில் வாட்டிக் கொள்ளவும். அரிசி மாவிலிருந்து ஒரு பகுதியை எடுத்து வாழை இலையின் மீது வைத்து தட்டவும். இதன் நடுவே தயாராக வைத்துள்ள பூரணத்தை வைத்து வாழை இலையை மூடவும். இதை ஆவியில் 10 நிமிடங்களுக்கு வேகவைத்து பரிமாறலாம். வாழை இலையின் மணத்துடன் இலை அடை சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: சுவையான கேரளா ஸ்டைல் அவியல் ரெசிபி, இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP