விநாயகர் சதுர்த்தி என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? கொழுக்கட்டை தானே! இதே போல் ரம்ஜான் என்றவுடன் பிரியாணி, தீபாவளி என்றவுடன் முறுக்கு மற்றும் அதிரசம், கிறிஸ்துமஸ் என்றவுடன் கேக் என பண்டிகை நாட்களை பற்றி பேசும் பொழுது நம் நினைவுக்கு வருவது உணவுகள் தான். உணவு நம் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் ஓணம் என்றவுடன் ஓணம் சத்யா விருந்து தான் நினைவுக்கு வரும்.
கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகைகளில் ஓணமும் ஒன்று. இது 10 நாள் திருவிழாவாக மிகுந்த உற்சாகத்துடனும் ஆடம்பரத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஏற்பாடு செய்யப்படும் விருந்தும் மிகவும் முக்கியமானது. பாரம்பரியமாக வாழை இலையில் பரிமாறப்படும் சத்யா விருந்தில் மொத்தம் 21-28 வகையான சைவ உணவுகள் இடம் பெருகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: இப்படி ரவா கிச்சடி செஞ்சு பாருங்க, தினமும் செய்ய சொல்லி கேட்பாங்க!
பாரம்பரிய உணவுகள் நிறைந்த இந்த உணவுகளை ஒவ்வொன்றாக ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். இதுவரை இந்த விருந்தை நீங்கள் சுவைத்தது இல்லை என்றால் இம்முறை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். இந்த ஓணம் விருந்தில் இடம்பெறும் சில முக்கிய உணவுகளை பற்றி இன்றைய பதிவில் காணலாம்.
உளுந்து மாவில் செய்யப்படும் அப்பளத்தை கேரளாவில் பப்படம் என்று அழைக்கிறார்கள்.
ஓணம் விருந்தில் நேந்திரன் வாழைக்காய்களை கொண்டு செய்யப்பட்ட சிப்ஸ் நிச்சயமாக இடம் பெறும்.
நேந்திரன் வாழைக்காய்களை பொறித்த பின், ஏலக்காய், சீரகம் மற்றும் சுக்கு சேர்த்த வெல்லப்பாகில் புரட்டி எடுத்தால் சுவையான ஷர்கர வரட்டி தயார்.
மலையாள வீடுகளில் திருவோண நாளன்று தயாரிக்கப்படும் பல சுவை நிறைந்த பச்சடி இது.
விருந்தில் காரமான சுவையை சேர்க்க மாங்காய் மற்றும் தேங்காய் பாலை பயன்படுத்தி இந்த குழம்பு செய்கிறார்கள்.
இது ஓணம் விருந்தில் இரண்டு பேரும் ஸ்பெஷல் ஊறுகாய்.
இந்த பச்சடி செய்வதற்கு அவர்கள் பைனாப்பிள் போன்ற பழங்களை பயன்படுத்துகிறார்கள். வித்தியாசமான இந்த பச்சடியை மறக்காமல் ட்ரை செய்யுங்கள்.
இது தேங்காய் பால் மற்றும் காராமணியை முக்கியமாக கொண்டு தயாரிக்கப்படும் கலக்கலான ரெசிபி.
பூசணிக்காய், காராமணி, தேங்காய் துருவல் நிறைந்த அற்புதமான பொறியியல் இது.
தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை மற்றும் காய்கறிகளின் கலவையான இந்த அவியலும் ஓணம் விருந்தில் நிச்சயமாக இடம்பெறும்.
கேரளாவின் பிரத்தியேக மட்டை அரிசி சாதம் இருந்தால் போதும், இலையும், வயிறும் முழுமை அடைந்துவிடும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை தவிர சேனைக்கிழங்கு மிளகு பிரட்டல், சாம்பார், ரசம், மோர், தயிர், பாயாசம், அடை பிரதமன் போன்ற ஏராளமான ரெசிபிகளும் இந்த விருந்தில் இடம்பெறுகின்றன. இதில் உங்களுக்கு தெரிந்த ரெசிபிகளை சமைத்து ஓணம் விருந்து நீங்களும் தடபுடலாக கொண்டாடுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தி தோசை, காலை உணவுக்கு இப்படி ஹெல்தியா செஞ்சு சாப்பிடுங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com