உணவே மருந்தாக இருந்த காலங்கள் போய்விட்டது. சாப்பிடக் கூட உணவுகளால் தான் இன்றைக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு பல வைத்தியங்களைப் பார்த்து வருகின்றோம். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் கட்டாயம் ஒவ்வொரு வீடுகளிலும் மாடித் தோட்டம் இருக்க வேண்டும். இதுவரை மாடித் தோட்டம் குறித்த விழிப்புணர்வு எதுவும் இல்லையென்றால்? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள் இங்கே.
மாடித்தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகள்:
- மாடித் தோட்டம் அமைக்கப்படவுள்ள இடத்தில் இரப்பர் கோட் பெயிண்ட் அடிக்க வேண்டும்.
- அடுத்ததாக கனம் குறைந்த ஜாடிகள், மண் தொட்டி, பழைய பிளாஸ்டிக் வாளிகள், உடைந்த மண் பானைகள்,பிளாஸ்டிக் பைகளில் மண் போட்டு மாடித் தோட்டத்தில் செடிகளை வளர்க்கலாம்.
- செம்மண், களிமண், மண்புழு உரம் போன்றவற்றை ஒன்றாக்கி பாக்கெட்டுகளில் கலந்து விதைகளைப் போட்டு வளர்க்கலாம். பொதுவாக கீரைகள், வெண்டைக்காய்,கத்தரி, தக்காளி போன்ற காய்கறிகள் வளர்க்க வேண்டும் என்றால் உபயோகிக்கும் பைகளில் கொஞ்சம் மாற்றம் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க:மாடித் தோட்டத்தில் ஊட்டி கேரட் திரட்சியாக வளர இதை பண்ணுங்க
- குறிப்பாக கீரைகள் வளர்க்கப் போகிறோம் என்றால், நீளம் மற்றும் அகலம் அதிகமான பைகளோடு உயரம் குறைந்த பைகளைப் பயன்படுத்த வேண்டும். வேர் அதிகம் உள்ள காய்கறிகளை மாடித் தோட்டத்தில் பயிரிடப் போகிறீர்கள் என்றால் உயரம் அதிகம் உள்ள பைகளைப் பயன்படுத்த வேண்டும்.
மாடித் தோட்டம் தானே எப்படியாவது வளர்ந்து விடும் என்று நினைப்பது தவறு. நீங்கள் வளர்க்கும் ஒவ்வொரு செடிகளுக்கும் நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சமும் தேவை. எனவே செடிகள் உயரமாக வளரும் போது நிழல் எதுவும் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிவிட வேண்டும். ஜாடி மற்றும் பிளாஸ்டிக் பைகளில் வைத்திருக்கும் மண்ணை அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation