ஜென் இசட் மற்றும் ஆல்பா தலைமுறை ( Gen Z and Alpha generations) குழந்தைகளை வளர்க்கும் காலக்கட்டத்தில் உள்ள ஒவ்வொரு பெற்றோர்களும் நெருக்கடி சூழலை சந்தித்து வருகின்றனர். ஆம் தொழில்நுட்பம் மற்றும் இணைய உலகில் வளர்ந்து வளரக்கூடிய குழந்தைகளுக்கு எது நல்லது? எது கெட்டது? என பகுத்தறிவு கிடைப்பதில்லை. அதைக் கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் முதன்மையான கடமைகளில் ஒன்று. இதற்கு நிச்சயம் 7-7-7 விதி உதவக்கூடும். எப்படி? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்கிறோம்.
7-7-7 விதி:
பெரிய பெரிய நகரங்களில் ஒற்றைக் குடும்பங்களில் வசிக்கும் சில குழந்தைகளின் நிலை மிகவும் மோசமாகி வருகிறது. இதனால் தான் பல பாலியல் துன்புறுத்தல் போன்ற நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுவிடுகிறார்கள். இவற்றைத் தடுக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பாக இருக்க வேண்டும். எது நல்லது? எது கெட்டது? என சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது குழந்தைகளின் மனநிலை மற்றும் உடல் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பதோடு குழந்தைகளுக்கு நல்ல பிணைப்பை ஏற்படுத்துகிறது. இந்த 7-7-7 விதிப்படி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் 7-7 நிமிடங்கள் செலவிட வேண்டும்.
காலையில் 7 நிமிடங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள். அப்போது நீங்கள் அன்றைக்கான திட்டமிடல் என்ன? என்பது குறித்து பேசுங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள்? என பேசுவதற்கு அறிவுறுத்துங்கள். அவர்களின் பேச்சைக் கேளுங்கள். இவ்வாறு செய்யும் போது நேர்மறை ஆற்றல் அதாவது பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
மேலும் படிக்க:குழந்தை வளர்ப்பு கடினமாக இருக்கிறதா? பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்
இதையடுத்து மாலை நேரத்தில் 7 நிமிடங்கள் உங்களது குழந்தைகளிடம் நேரத்தை செலவிட வேண்டும். பள்ளியில் என்ன நடந்தது? என்னென்ன செய்தீர்கள்? என நண்பர்கள் போன்று கேட்டறிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஜாலியாக பேசும் போது உங்களிடம் வெளிப்படையாக அவர்கள் சொல்ல நேரிடும். அதை வைத்து எதையெல்லாம் அவர்கள் தவறாக செய்கிறார்கள்? எதை சரியாக செய்கிறார்கள்? என அறிந்துக் கொள்ளலாம். ஒருவேளை மாற்ற வேண்டிய நிலை இருந்தால் அதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவும். ஒருவேளை ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதை எப்படி கையாள வேண்டும் என அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவும்.
இறுதியாக இரவு தூங்கும் போது குழந்தைகளிடம் அதே 7 நிமிடங்களுக்கு பேசுங்கள். தூங்கும் போது நன்னடத்தை கதைகளை அவர்களுக்குச் சொல்லவும். இது அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க உதவக்கூடும்.
மேலும் படிக்க:கடுமையான பணிச்சூழலிலும் வீட்டில் குழந்தையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட உதவும் குறிப்புகள்
இதோடு மட்டுமின்றி 7-7-7 விதியை வேறு வழிமுறைகளிலும் பின்பற்றலாம். முதல் 7 வயது வரை அவர்களுக்கு அன்பு கொடுக்க வேண்டும். அடுத்த 8-14 வயது வரை ஒழுக்கம் மற்றம் பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க வேண்டும். மூன்றாவதாக 15 - 21 வயது வரை நண்பனாக இருக்க வேண்டும். இந்த நேரங்களில் அவர்களுக்கு எது நல்லது? எது கெட்டது? என சொல்லிக் கொடுக்க வேண்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation