அவியல் என்பது பல காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவை நிறைந்த உணவாகும். இதில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய், தேங்காய், தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் அவியலுக்கு தனித்துவமான சுவையையும், மணத்தையும் கொடுக்கின்றன. ஒரு சிலர் புளிப்பு சுவைக்காக மாங்காய் அல்லது புளியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பாரம்பரிய முறையின் படி தயிரை பயன்படுத்துவதே சிறந்தது.
ஓணம் சத்யா விருந்து அவியல் இன்றி நிறைவடையாது. காய்கறிகள் முழுமையாக வெந்திருக்க வேண்டும் ஆனால் குழையக்கூடாது. அவியல் நீர்க்க இருக்க கூடாது ஆனால் தேங்காய் மசாலா எல்லாம் காய்கறியுடன் சேர்ந்து பிரியாமல் இருக்க வேண்டும். அட, அவியல் செய்வது இவ்வளவு கஷ்டமா என்று பயந்துவிடாதீர்கள். சிறுசிறு நுணுக்கங்களை முறையாக பின்பற்றினால் மோதும் நீங்களும் பெர்ஃபெக்ட்டான அவியல் செய்யலாம். அவியல் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இப்படி ரவா கிச்சடி செஞ்சு பாருங்க, தினமும் செய்ய சொல்லி கேட்பாங்க!
அவியல் செய்வதற்கு கேரட், பீன்ஸ், வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, முருங்கைக்காய் போன்ற காய்கறிகளில் உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த அற்புதமான ரெசிபியை செய்வதற்கு ஓணம் வரை காத்திருப்பது சற்று கடினம் தான், வீட்டில் காய்கறிகள் இருந்தால் இன்றே அவியல் செய்து உண்டு மகிழுங்கள்!
இந்த பதிவும் உதவலாம்: இவ்வளவு வெரைட்டியா! ஓணத்திற்கு இப்படி தடபுடலாக விருந்து செய்து அசத்துங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik & google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com