image

Parasakthi Release Date: பராசக்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்; திடீர் மாற்றத்திற்கு இது தான் காரணமா?

Parasakthi Movie Release Date Update: பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே அறிவித்த தேதிக்கு முன்னதாக இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2025-12-23, 13:49 IST

Parasakthi: சுதா கொங்கரா இயக்கத்தில், ரவி மோகன், சிவகார்த்திகேயன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராசக்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி:

 

முன்னதாக, பராசக்தி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், அதற்கு முன்னதாக ஜனவரி 10-ஆம் தேதியே உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பராசக்தி திரைப்படம் வெளியிடப்பட இருப்பதாக, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், "ஊடக நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.

 

பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஜனவரி 10, 2026-க்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

உலகம் முழுவதிலும் உள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், இத்திரைப்படத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை தொடர்ந்து, அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கவும், பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, பராசக்தி திரைப்படம் வருகிற ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும்" என டான் பிக்சர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க: Year Ender 2025: இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள் லிஸ்ட் இதோ 

 

பராசக்தி ரிலீஸ் தேதி மாற்றத்திற்கான காரணம்:

 

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், 1960-களில் நடைபெறும் பீரியட் ஆக்‌ஷன் டிராமாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், இப்படம் தொடர்பான கண்காட்சியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது. இதில், இப்படம் உருவான விதம் குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், பராசக்தி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், ஜனவரி 14 தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த பராசக்தி திரைப்படம், ஜனவரி 10-ஆம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளின் பேரில், ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Year Ender 2025: இந்த ஆண்டில் வசூல் சாதனை படைத்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ! 

 

பொங்கலுக்கு வெளியாகும் ஜனநாயகன் திரைப்படம்:

 

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம், பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை, ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதால், ஜனநாயகன் திரைப்படத்துடன் திரைத்துறையில் இருந்து விஜய் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளன.

 

பொங்கலுக்கு வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்:

 

அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்கு சுமார் ஒரு மாதம் இருக்கும் நிலையில், இரண்டு பெரிய திரைப்படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இதனால், இப்போதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த இரு திரைப்படங்களும் பெரும் பொருட்செலவில் உருவாகி இருப்பதால், இதனை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். முன்னதாக, டிசம்பர் 27-ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதேபோல், பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com