herzindagi
image

Jana Nayagan first single release: ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு; உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

Jana Nayagan first single release: விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Editorial
Updated:- 2025-11-07, 13:00 IST

Jana Nayagan first single release: ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர்கள் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல்  வெளியீடு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க: Gouri Kishan: உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்; உருவக் கேலிக்கு எதிராக நடிகை கௌரி கிஷன் பதிலடி

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும், முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்த அவர், இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறி இருந்தார்.

 

ஜனநாயகன் திரைப்படம்:

 

இதனால், அவரது நடிப்பில் உருவாகி வரும் கடைசி திரைப்படமான ஜனநாயகன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கே.வி.என் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் வரும் 2026-ஆம் ஆண்டில் ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: New Tamil Ott Releases This Week: பேட் கேர்ள் முதல் கிஸ் வரை ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்

 

ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல்:

 

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் வரும் நவம்பர் 8-ஆம் தேதி வெளியாகும் என்று கே.வி.என் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனிருத் இசையில் விஜய்யின் கடைசி திரைப்படத்தின் பாடல்கள் எவ்வாறு இருக்கும் என்று அறிய பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

மேலும், ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான போஸ்டரும் கே.வி.என் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக, விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest of All Time) திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும், இப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது என்று தயாரிப்பு நிறுவனத்தினர் கூறி இருந்தனர்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com