
பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக ரவி மோகன் நடித்திருந்தாலும், தன்னுடைய கல்லூரி காலத்தில் இருந்து அவர் ஹீரோவாக இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பராசக்தி திரைப்படம் தொடர்பான நிகழ்வின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தொடர்பான பல்வேறு தகவல்களை எடுத்துரைக்கும் விதமான நிகழ்வு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு தி வேர்ல்ட் ஆஃப் பராசக்தி (The World of Parasakthi) என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1960-களில் தமிழ்நாட்டை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், அதனை எடுத்துரைக்கும் விதமான கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இப்படத்தின் இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அப்போது, பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து தனது அனுபவத்தை கலகலப்பாக கூறி இருந்தார்.
மேலும் படிக்க: Karuppu Movie Update: கருப்பு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்; சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி
அதன்படி, "1960-களில் நடந்த விஷயங்களை மையமாக எடுத்துக் கொண்டு அதனை சுற்றி கதையை அமைத்து பராசக்தி திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முதல் காரணம் சுதா கொங்கரா தான். ஏனெனில், இந்த திரைப்படத்திற்காக சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் அவர் பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிப்பது ஒரு சவாலாக இருந்தது. அந்த சவாலை ஏற்றுக் கொள்வதற்கு எல்லோரும் தயாராக இருந்தோம்.

மேலும் படிக்க: Padayappa Re-Release: படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை முதலில் அணுகினோம்; சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த ரஜினிகாந்த்
இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து நடித்தது, அவருடன் சகோதரத்துவ பிணைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதர்வாவின் முதல் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் நான் நெறியாளராக பணியாற்றி இருக்கிறேன். அந்த தருணத்தில் தனது தந்தையுடன் அதர்வா வந்திருந்தார். என்னால், மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. மேலும், ஸ்ரீலீலா தமிழில் நடிக்கும் முதல் திரைப்படம் இது. இப்படத்தில் அவர் இணைந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்ததற்காக ரவி மோகனுக்கு நன்றி கூற வேண்டும். ஹீரோவாக ஒரு கதையை கேட்டு அதில் நடிப்பதை முடிவு செய்வது எளிமையான விஷயம். ஆனால், ஒரு ஹீரோவாக வெற்றிகரமாக இத்தனை ஆண்டுகள் பயணம் செய்த பின்னர், வில்லனாக நடிக்க முடிவு செய்தது கடினமான விஷயம். இந்த படத்தில் மட்டும் தான் அவர் வில்லன்.

ஆனால், என்னுடைய கல்லூரி நாட்களில் இருந்து நான் பார்த்த ஹீரோவாக ரவி மோகன் திகழ்கிறார். அந்த காரணத்தினால் தான், படத்தில் அவரது பெயரை முதலாவதாக குறிப்பிட்டுள்ளோம். இங்கு இருப்பவர்களிலேயே அவர் தான் சீனியர் நடிகர்" என சிவகார்த்திகேயன் தெரிவித்தார். சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
5️⃣0️⃣ days to go before the #Parasakthi storm takes over theatres
— DawnPictures (@DawnPicturesOff) November 25, 2025
The Countdown Begins⏳#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14… pic.twitter.com/zuit13achN
பராசக்தி திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com