
Actor Vijay: விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இதனால், வினோத் இயக்கத்தில், அவர் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படம் தான், அவரது கடைசி திரைப்படமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்படத்தின் மீது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ஆர்வலர்களின் கவனமும் திரும்பி இருக்கிறது. இந்த சூழலில், ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை (டிசம்பர் 18) வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest of All Time) திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூலில் இப்படம் வெற்றி பெற்றதாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், ஜனநாயகன் திரைப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
Calm till yesterday..
— KVN Productions (@KvnProductions) December 16, 2025
Storm from the 18th🔥#JanaNayaganSecondSingle is releasing on Dec 18th 🧨#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss… pic.twitter.com/aHPnTb6IOg
மேலும் படிக்க: Karuppu Movie Update: கருப்பு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்; சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முன்னதாக, விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. மேலும், முன்னணி நடிகர்களான பிரகாஷ் ராஜ், பாபி தியால், நரேன், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் 2026-ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிக்கும் திரைப்படத்தை போன்று அதன் இசை வெளியீட்டு விழாவிற்காகவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். குறிப்பாக, இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு பேசுபொருளாக மாறும். மேலும், இப்படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதாலும், அவரது அரசியல் பயணத்தை தொடங்கி இருப்பதாலும், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்தது. அதன்படி, டிசம்பர் 27-ஆம் தேதி மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மிகவும் பிரம்மாண்டமாக நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Malaysia, We are coming 😁#JanaNayaganAudioLaunch
— KVN Productions (@KvnProductions) November 21, 2025
▶️ https://t.co/HoZS9F9etB
📍Bukit Jalil Stadium, Kuala Lumpur, Malaysia
See you on Dec 27, 2025 ❤️#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss… pic.twitter.com/g1h2xNcEDP
மேலும் படிக்க: Padayappa Re-Release: படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை முதலில் அணுகினோம்; சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த ரஜினிகாந்த்
ஏற்கனவே, ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி அண்மையில் வெளியானது. அனிருத் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு, விஜய் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், நாளை வெளியாகும் இப்படத்தின் இரண்டாவது பாடல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே நிலவுகிறது. இந்த பாடலில் விஜய்யின் அரசியல் வருகையை கூறும் விதமான வரிகள் இடம்பெறக் கூடும் என்ற தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது.
இதனால், நாளைய தினம் ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை கேட்பதற்காக விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com