herzindagi
image

Year Ender 2025: இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள் லிஸ்ட் இதோ

Tamil Celebrities Marriage 2025: இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்ட முக்கிய தமிழ் திரைப்பிரபலங்கள் யாரென்று இந்தக் கட்டுரையில் காணலாம். முன்னணி நடிகை சமந்தா உள்ளிட்ட சிலர் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Editorial
Updated:- 2025-12-22, 16:59 IST

Celebrities Wedding 2025: இந்த ஆண்டில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் குறித்து இந்த சிறப்பு செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். இவர்களில் முன்னணி நடிகை சமந்தா அண்மையில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

2025-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்:

 

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திரைப்பிரபலங்களின் திருமணம் அரங்கேறுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டிலும் ஏராளமான திரைக்கலைஞர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் மிகவும் பிரபலமான முக்கிய கலைஞர்கள் யாரென்று பார்க்கலாம்.

View this post on Instagram

A post shared by M.g Abhinaya (@abhinaya_official)

மேலும் படிக்க: Actress Sunaina: நடிகை சுனைனாவின் காதலர் இவர் தானா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு 

 

நடிகை அபிநயா திருமணம்:

 

சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் அபிநயா. இவர் தமிழில் ஈசன், பூஜை, குற்றம் 23 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதியன்று தனது காதலர் வகிசனா கார்த்திக் என்பவரை அபிநயா திருமணம் செய்து கொண்டார்.

View this post on Instagram

A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande)

மேலும் படிக்க: Year Ender 2025: இந்த ஆண்டில் வசூல் சாதனை படைத்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ!

 

தொகுப்பாளினி பிரியங்கா திருமணம்:

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதியன்று வசி என்பவரை திருமணம் செய்தார். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் இவர்களது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

View this post on Instagram

A post shared by Senthil kumar (@camerasenthil)

பாவனி - ஆமீர் திருமணம்:

 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானவர்கள் ஆமீர் மற்றும் பாவனி. இவர்களில் பாவனி சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர் ஆமீர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

View this post on Instagram

A post shared by Samyuktha Shanmughanathan (@samyuktha_shan)

நடிகை சம்யுக்தா திருமணம்:

 

இதேபோல், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் நடிகை சம்யுக்தா. இவர் ஏற்கனவே, விவாகரத்து பெற்ற நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் மகன் அனிருத்தாவை கடந்த நவம்பர் மாதம் 27-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண நிகழ்வில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

நடிகை சமந்தா திருமணம்:

 

இந்த சூழலில், கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி நடிகை சமந்தாவிற்கும், தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிடிமோருவிற்கும் திருமணம் நடைபெற்றது. கோவையில், ஈஷா யோகா மையத்தில் உள்ள கோயிலில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் இந்த திருமணம் நடைபெற்றது. முன்னதாக, பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும், சமந்தாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: instagram

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com