herzindagi
image

Actress Anupama Parameswaran: நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மார்பிங் புகைப்படங்களை வெளியிட்டு அவதூறு; தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கைது

Actress Anupama Parameswaran: நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு அவதூறு பரப்பிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். இத்தகவலை நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Editorial
Updated:- 2025-11-10, 12:03 IST

Actress Anupama Parameswaran: நடிகை அனுபமா பரமேஸ்வரனின் பெயரில் போலி சமூக ஊடக கணக்கு தொடங்கி, மார்பிங் புகைப்படங்களை பரப்பிய பெண் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் சினிமா துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: Gouri Kishan: உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்; உருவக் கேலிக்கு எதிராக நடிகை கௌரி கிஷன் பதிலடி

 

மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். இதைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இவர் நடித்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வரவேற்பை பெற்றன.

 

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் பெயரில் போலி கணக்கு:

 

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், அனுபமா நடித்த பைசன் காளமாடன் திரைப்படமும் பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, விமர்சகர்கள், பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அனுபமா பரமேஸ்வரனின் நடிப்பை பாராட்டி இருந்தனர்.

Anupama Parameswaran

 

இந்நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரனின் பெயரில் போலியாக சமூக ஊடக கணக்கு தொடங்கி அவதூறு பரப்பும் விதமாக அவரது மார்பிங் புகைப்படங்களை வெளியிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினாரா நடிகை அபிராமி? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

 

நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

அதில், "சில நாட்களுக்கு முன்பு எனது பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி, அதில் தவறான மற்றும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு, என்னுடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் டேக் செய்தது எனக்கு தெரிய வந்தது. இச்சம்பவம் எனக்கு வருத்தத்தை அளித்தது.

 

இது குறித்து விசாரணை செய்யப்பட்டதில் அதே நபர் பல்வேறு போலி கணக்குகளை உருவாக்கி தரக்குறைவான பதிவுகள் மற்றும் அவதூறுகளை பரப்பியதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கேரள சைபர் க்ரைம் போலீசாரிடம் புகாரளித்தேன். புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், இச்சம்பவத்தின் பின்னணியில் இருந்தவரை கண்டறிந்தனர்.

View this post on Instagram

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயதான பெண் ஒருவர், இச்செயல்களை செய்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பெண்ணின் வயது, எதிர்காலம் மற்றும் மன நிம்மதி ஆகியவற்றை கருத்திற்கொண்டு, அந்நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை நான் வெளியிட விரும்பவில்லை. எனினும், ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் வசதி இருப்பதால் எந்த ஒரு நபருக்கும் எதிராக அவதூறு பரப்புவதற்கும், தொல்லை கொடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை. இணையத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஆதாரங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட நபர் தான் இதற்கு பொறுப்பேற்க முடியும்.

 

சட்ட ரீதியாக எங்களது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். இதற்கான விளைவுகளை சம்பந்தப்பட்ட நபர் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். நடிகராக அல்லது பொதுமக்களிடையே நன்கு அறியப்பட்ட நபராக இருப்பதனால் அவர்களது அடிப்படை உரிமைகளை அகற்ற முடியாது. இணையம் மூலமாக ஒரு நபருக்கு தீங்கு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Instagram

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com