Nivetha pethuraj: காதலரை அறிமுகப்படுத்திய நடிகை நிவேதா பெத்துராஜ்; வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் ஆச்சரியம்!

Nivetha pethuraj: நடிகை நிவேதா பெத்துராஜ், தனது காதலரை அறிமுகம் செய்துள்ளார். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இன்ஸ்டாகிராம் பதிவு வாயிலாக தனது காதலரை அறிமுகம் செய்த அவருக்கு, ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
image
image

Nivetha pethuraj: நடிகை நிவேதா பெத்துராஜின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளாது. தனது காதலரை அறிமுகம் செய்த அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை நிவேதா பெத்துராஜ், கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இப்படத்தில் அவரது பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக தமிழில் 'பொதுவாக என் மனசு தங்கம்', 'டிக் டிக் டிக்', 'திமிரு புடிச்சவன்', 'சங்கத் தமிழன்' போன்ற படங்களில் நடித்தார்.

Actress Nivetha Pethuraj

நிவேதா பெத்துராஜ் திரைப்படங்கள்:

தமிழ் மட்டுமின்று தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நிவேதா பெத்துராஜ் தோன்றியுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'மென்டல் மதிலோ' என்ற படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் நிவேதா பெத்துராஜ் அறிமுகம் ஆனார். கடந்த 2020-ஆம் ஆண்டு அல்லு அர்ஜூனுடன் இவர் இணைந்து நடித்த 'அல வைகுண்டபுரம்லூ' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இது தவிர 'பருவு' என்ற இணையத் தொடரிலும் நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார்.

நடிப்பு மட்டுமின்றி ஃபார்முலா கார் பந்தயங்களிலும் ஆர்வம் கொண்ட நிவேதா பெத்துராஜ், அதற்கான பயிற்சிகளில் தான் பெற்ற சான்றிதழ்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படி பன்முக திறமையாளராக விளங்கும் நிவேதா பெத்துராஜ், தற்போது தன்னுடைய காதலருடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Nivetha pethuraj lover

ரஜித் இப்ரான் என்பவரை காதலித்து வருவதாக நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ள ரஜித் இப்ரான், தொழிலதிபராகவும் திகழ்வதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நிவேதா பெத்துராஜுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP