
Bigg Boss Malayalam 7 Winner Anumol: மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மலையாளம் சீசன் 7-ல் சின்னத்திரை நடிகை அனுமோல் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றார். இந்தக் கட்டுரையில் அவரது பயணம் குறித்து காணலாம்.
மேலும் படிக்க: Dude ott release date: ஓடிடியில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
பிக்பாஸ் மலையாளம் சீசன் 7-ன் பிரம்மாண்ட இறுதிப் போட்டி ஒரு எதிர்பாராத திருப்பத்துடன் முடிவடைந்தது. இது ரசிகர்களை உற்சாகத்திலும் அதே சமயம் உணர்ச்சிவசப்படவும் செய்தது. அந்த வகையில் வெற்றியாளராக அனுமோல் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அனீஷ் இரண்டாம் இடத்தை பிடித்தார். அவரைத் தொடர்ந்து ஷானவாஸ், நெவின் மற்றும் அக்பர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
அனுமோலின் இந்த பிக்பாஸ் பயணம், சீரான வளர்ச்சி, உணர்ச்சிப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் கூர்மையான அவதானிப்புகளால் நிறைந்துள்ளது. தொடக்கத்தில் இருந்து அவர் தனித்து நிற்க இவை அனைத்தும் உதவியது. பல போட்டியாளர்கள் வலுவான ரசிகர் பட்டாளத்துடன் நுழைந்தாலும், அனுமோலின் தொடர்ச்சியான செயல்பாடுகள், படிப்படியாக அவரை இந்த சீசனின் மிகவும் விரும்பப்பட்ட நபர்களில் ஒருவராக மாற்றியது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிறந்த அனுமோல், சமஸ்கிருதத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு, பிரபலமான தொலைக்காட்சி தொடர்கள் மூலம் நன்கு அறியப்பட்டவராக அவர் திகழ்ந்தார். அவரது நிதானமான ஆளுமை, இயற்கையான நகைச்சுவை உணர்வு மற்றும் அனுதாபமான அணுகுமுறை ஆகியவை வீட்டிலுள்ள போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இணைவதற்கு அவருக்கு உதவியது.
மேலும் படிக்க: Actress Anupama Parameswaran: நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மார்பிங் புகைப்படங்களை வெளியிட்டு அவதூறு; தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கைது
அனுமோல் தனது சின்னத்திரை பயணத்தை 2014 ஆம் ஆண்டு 'அனியத்தி' என்ற சீரியல் மூலம் தொடங்கினார். அதில் அவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் 'சங்கமம்', 'கிருஷ்ண துளசி', 'ராத்ரிமழா', 'பாடாத பைங்கிளி', மற்றும் 'சத்யா என்னா பெண்குட்டி' போன்ற பல தொடர்களில் நடித்தார்.
இவை மட்டுமின்றி 'திங்கள் முதல் வெள்ளி வரே', 'கல்யாணம்' மற்றும் 'மகேஷும் மாருதியும்' போன்ற திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில், சிறந்த துணை கதாநாயகி என்ற தொலைக்காட்சி விருதை அனுமோல் வென்றார். இதன் மூலம் தனது நடிப்பு திறமையை அவர் நிரூபித்தார்.
View this post on Instagram
அனுமோலின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக 'தமார் பத்தார்' என்ற கேம் ஷோ அமைந்தது. இதில் பல தரப்பினரின் கவனத்தை அனுமோல் ஈர்த்தார். பின்னர் அவர் இடம்பெற்ற 'ஸ்டார் மேஜிக்' என்ற நிகழ்ச்சி அவரை பிரபலமாக்கியது.
'அபி வெட்ஸ் மஹி' என்ற வெப் சீரிஸிலும் அனுமோல் நடித்தார். அதில் நடிகர் ஜீவன் கோபாலுடன் இணைந்து அவர் நடித்தது, பலரது பாராட்டுகளை பெற்றது. மேலும், 'ஹிருதயகுமார் டீச்சர்'-யிலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இது அவரது பன்முக திறமையைக் காட்டியது. தற்போது, 'சுரபியும் சுஹாசினியும்' என்ற நகைச்சுவை தொடரில், நடிகை மல்லிகா சுகுமாரனின் மருமகளாக அனுமோல் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் அவரது புகழை மேலும் அதிகரித்தது.
அதன்படி, தனது படிப்படியான வளர்ச்சி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அனுமோல் தற்போது வெற்றிக் கோப்பை தட்டிச் சென்றுள்ளார்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com