
Priyanka Chopra as Mandakini: இயக்குநர் ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபுவின் திரைப்படத்தில் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Globe Trotter song: ராஜமௌலி - மகேஷ் பாபு இணையும் படத்தின் முதல் பாடல் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்
ராஜமௌலியின் இயக்கத்தில், மகேஷ் பாபு, பிரித்வி ராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் க்ளோப்ட்ராட்டர் (Globetrotter) என்று அழைக்கப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படமாக இது கருதப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு பான் இந்தியன் அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில் இப்படத்தில் பிரித்வி ராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பிரித்வி ராஜின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் இருந்து, கும்பா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் பிரித்வி ராஜ் நடிப்பது உறுதியானது. மேலும், இப்படத்தின் முதல் பாடலை கீரவாணி இசையில் ஸ்ருதி ஹாசன் பாடி இருந்தார். இப்பாடலுக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் படிக்க: Dude ott release date: ஓடிடியில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ராவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்த போஸ்டரில், மஞ்சள் நிற புடவையில் தோற்றமளிக்கும் பிரியங்கா சோப்ரா, கைகளில் துப்பாக்கி ஏந்தி இருக்கிறார். இதன் மூலம் திரைப்படத்தில் அவரது ஆக்ஷன் காட்சிகள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
She’s more than what meets the eye… say hello to Mandakini. #GlobeTrotter@ssrajamouli @urstrulyMahesh @mmkeeravaani @SriDurgaArts @SBbySSK @PrithviOfficial pic.twitter.com/3KqKnb2D5h
— PRIYANKA (@priyankachopra) November 12, 2025
சமீப நாட்களில் ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பிரியங்கா சோப்ரா தொடர்ந்து நடித்து வந்தார். இதனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய சினிமாவில் அவரை காண்பதற்கு பலர் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக, உலக அளவில் பிரியங்கா சோப்ராவிற்கு ரசிகர் பட்டாளம் பெருகி இருப்பதால், அவரது மந்தாகினி என்ற கதாபாத்திரம் மீது பல்வேறு தரப்பில் இருந்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், இப்படத்தின் முன்னோட்டம் தொடர்பான நிகழ்வு வரும் நவம்பர் 15-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு ஆகிறது. அன்றைய தினத்தில் இப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும் என்று கருதப்படுகிறது. இதனிடையே, படத்தின் நாயகனான மகேஷ் பாபுவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com