
பிக்பாஸ் என்ற பிரபலமான ரியாலிட்டி ஷோ, பல புதிய முகங்களை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒருவராக அறியப்பட்டவர் ஜூலி. இவர், யாரும் எதிர்பாராத வகையில், தற்போது தனது திருமண அறிவிப்பை வெளியிட்டு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த அறிவிப்பு மற்றும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, மாப்பிள்ளை யார் என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
ஜூலியின் முகம் தமிழ் மக்களிடையே முதலில் பிரபலமடைந்தது, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதுதான். மெரினாவில் நடந்த இந்த மாபெரும் எழுச்சியில், வீரமாகவும் கம்பீரமாகவும் ஒலித்த இவரது குரல், ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தப் போராட்டக் களத்தில் இவரது பங்களிப்பு, இவருக்குப் பெரும் அடையாளத்தைக் கொடுத்தது. எந்தவித தொலைக்காட்சிப் பின்னணியும் இல்லாமல் பொதுவெளியில் பிரபலமான இவர், அதன் மூலம் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் முதல் கட்டப் போட்டியாளராகக் களமிறங்கினார்.

தொலைக்காட்சி அறிமுகம் இல்லாத நிலையிலும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜூலி, மற்ற போட்டியாளர்களைப் போலவே அங்கே தனது தனிப்பட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்தினார். இருப்பினும், பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் நடந்துகொண்ட விதம், அவர் பேசிய சில விஷயங்கள் ஆகியவற்றால், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இருந்த அவரது பிம்பம் முற்றிலும் தலைகீழாக மாறியது. அவரது செயல்பாடு பல விமர்சனங்களைச் சந்தித்தது, என்றாலும், ஜூலி ஒருபோதும் மக்களின் கவனத்தைவிட்டு விலகவில்லை.
மேலும் படிக்க: நடிகை சுனைனாவின் காதலர் இவர் தானா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ஜூலி சில தொலைக்காட்சித் தொடர்களிலும், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தார். தொடர்ந்து தனது இருப்பை மக்களின் பார்வைக்கு உட்படுத்தி வந்த இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் தனது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களில் அவர் மிகவும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் காணப்படுகிறார். தான் ஒரு சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதிவிட்ட கேப்ஷனில், "இந்த உலகை மிகவும் அழகானதாக மாற்றும் இந்த ஆண் மீது நான் பைத்தியமாக இருக்கிறேன். நான் கடவுளிடம் வேண்டியதெல்லாம் இவராகத்தான் இருக்கும். நான் மன நிறைவுடன் இருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும், அனைவரையும் அவர் ஆவலுடன் பார்க்கக் காத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க: ஸ்டீஃபன் முதல் தி கேர்ள் ஃப்ரண்ட் வரை; இந்த வெள்ளிக்கிழமை ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்
இந்தப் பதிவில், நிச்சயதார்த்த நிகழ்வில் எடுக்கப்பட்ட ஜூலியின் அழகான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அந்தப் புகைப்படங்களில் ஒரு முக்கியமான விஷயம் மட்டும் விடுபட்டுள்ளது. அதாவது, மாப்பிள்ளை யார்? என்பதுதான்! திருமண நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜூலி, மாப்பிள்ளையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைக்கூடப் பகிரவில்லை. இதனால், ஜூலியை மணந்துகொள்ளப் போகும் அந்த நபர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவரது இந்த எதிர்பாராத அறிவிப்பும், மாப்பிள்ளை குறித்த மர்மமும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி, ஜூலியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வேகமாக வைரலாகி வருகின்றன. அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று அறிய, விரைவில் ஜூலியே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com