herzindagi
image

Girija Oak: யார் இந்த கிரிஜா ஓக்? திடீரென இணையத்தில் ட்ரெண்டாகும் நடிகை

Girija Oak: நடிகை கிரிஜா ஓக் திடீரென இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார். இவர் யார் என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. அந்த வகையில் நடிகை கிரிஜா ஓக் குறித்து பலரும் இணையத்தில் தகவல் சேகரிக்கின்றனர்.
Editorial
Updated:- 2025-11-13, 13:26 IST

Girija Oak: நடிகை கிரிஜா ஓக் பங்குபெற்ற நேர்காணல் ஒன்று சமீபத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, கிரிஜா ஒக் யாரென்றும்? அவர் நடித்த திரைப்படங்கள் குறித்தும் இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: Priyanka Chopra as Mandakini: ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் கதாநாயகியான பிரியங்கா சோப்ராவின் போஸ்டர் வெளியீடு

 

இன்றைய இணைய உலகில் பலர் அடிக்கடி வைரல் ஆவது இயல்பான ஒன்றாக மாறி இருக்கிறது. வெவ்வேறு மொழி நடிகர்கள் இவ்வாறு இந்திய அளவில் கவனம் ஈர்க்கின்றனர். அந்த வரிசையில் மராத்தி மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற கிரிஜா ஓக்-உம் புதிய வரவாக இடம்பெற்றிருக்கிறார். இவர் சமீபத்தில் பங்கேற்ற நேர்காணல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.

 

யார் இந்த கிரிஜா ஓக்?

 

சமீபத்தில் ட்ரெண்டாகி வரும் கிரிஜா ஓக், தனது 15 வயதிலேயே திரைத்துறையில் கால் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல மராத்தி நடிகரான கிரிஷ் ஓக்-இன் மகளான கிரிஜா ஓக், மும்பையில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் பையோடெக்னாலஜி படித்தவர். படிப்பை தொடர்ந்து, விளம்பரங்கள் மூலம் தனது நடிப்பை கிரிஜா ஓக் தொடங்கினார்.

Actress Girija Oak

 

கடந்த 2018-ஆம் ஆண்டில் 'குவார்ட்டர்' (Quarter) என்ற குறும்படம் மூலம் அறிமுகம் ஆனவர் கிரிஜா ஓக். இந்த குறும்படம் 71-வது கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு மராத்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

மேலும் படிக்க: Dude ott release date: ஓடிடியில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

இவ்வாறு தொடர்ச்சியாக நடித்து வந்த இவருக்கு, தாரே ஸமீன் பார், ஷோர் இன் தி சிட்டி போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்து பெருவாரியான மக்களிடம் அவரை கொண்டு சேர்த்தன. மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்த ஜவான் திரைப்படத்திலும் கிரிஜா ஓக் நடித்திருந்தார்.

 

ட்ரெண்டாகும் கிரிஜா ஓக்:

 

இந்த சூழலில் தான் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் கிரிஜா ஓக் பங்குபெற்றார். அதில் இருந்து எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) கிரிஜா ஓக் ட்ரெண்டாகி வருகிறார். குறிப்பாக, அவரது எளிமையான உடை மற்றும் பேச்சு போன்றவை பலரையும் கவர்ந்துள்ளது. இதன் மூலம் கிரிஜா ஓக் தொடர்பான தேடல் இணையதளத்தில் அதிகரித்துள்ளது.

Who is girija oak

 

அவர் நடித்த முந்தைய திரைப்படங்களையும் பலர் பார்ப்பதாக கூறியுள்ளனர். மேலும், குல்ஷன் தேவையாவுடன் கிரிஜா ஓக் இணைந்து நடித்த தெரபி ஷெரபி (Therapy Sherapy) வெப் சீரீஸ் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த தொடரில் நடித்த அனுபவங்கள் குறித்து தனது நேர்காணலில் கிரிஜா ஓக் பகிர்ந்து கொண்டார்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Instagram

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com