herzindagi
image

Samantha: இயக்குநர் ராஜ் நிடிமோருவை கரம் பிடித்த நடிகை சமந்தா; முழு விவரம் இதோ

Samantha wedding: நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை இன்று திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் திரைத்துறையினர் மட்டுமின்றி பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த புதுமண தம்பதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
Editorial
Updated:- 2025-12-01, 15:14 IST

Actress Samantha: நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு ஆகியோருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமந்தா ரூத் பிரபு மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம்:

 

டிசம்பர் 1-ஆம் தேதியான இன்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஈஷா யோகா மையத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட வகையில், இவர்களது திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் பரவின. இந்த சூழ்நிலையில், திருமணம் குறித்த தகவல்களை உறுதி செய்யும் வகையில், அது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா பகிர்ந்து கொண்டார்.

 

யார் இந்த இயக்குநர் ராஜ் நிடிமோரு?

 

ராஜ் நிடிமோரு, பிரபல இந்திய - அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஆவார். ஓடிடி தளத்தில் இவரது இணையத் தொடர்கள் (Web Series) மற்றும் திரைப்படங்கள் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. கிருஷ்ணா டி.கே என்பவருடன் இணைந்து ராஜ் & டி.கே. (Raj & DK) என்ற பெயரில் இவர்கள் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை உருவாக்கி வருகின்றனர். இவர்கள் இணைந்து உருவாக்கிய 'தி ஃபேமிலி மேன்', 'ஃபார்ஸி' மற்றும் 'கோ கோவா கான்' உள்ளிட்ட இணையத் தொடர்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

Samantha Marriage

 

ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் கடந்த 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி பிறந்தவர் ராஜ் நிடிமோரு. இவரது தந்தை கிருஷ்ணா நிடிமோரு மற்றும் தாயார் ரமா ரத்னாகரா ஆவர். எஸ்.வி.யூ. கல்லூரியில் பொறியியல் படித்த ராஜ் நிடிமோரு, அதன் பின்னர் அமெரிக்கா சென்ற போது டி.கே-வை சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் தங்கள் தொழில் சார்ந்த பணிகளை விட்டுவிட்டு, திரைப்படங்கள் எடுப்பதில் கவனம் செலுத்தி உள்ளனர். இவர்கள் இருவரின் முதல் திரைப்படமான '99' கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியானது.

மேலும் படிக்க: இதை மட்டும் பின்பற்றினால் போதும்... சமந்தாவின் ஸ்கின் கேர் டிப்ஸ்

 

ராஜ் நிடிமோரு முதல் திருமணம்:

 

இதற்கு முன்பாக, ஷ்யாமலி டே (Shhyamali De) என்பவரை ராஜ் நிடிமோரு திருமணம் செய்திருந்தார். சைக்காலஜி துறையில் பட்டதாரியான ஷ்யாமலி டே, திரைத்துறையில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா மற்றும் விஷால் பரத்வாஜ் போன்ற இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளார். ராஜ் நிடிமோரு மற்றும் ஷ்யாமலி டே தம்பதி இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.

 

சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு காதல்:

 

இந்த சூழலில் ராஜ் நிடிமோரு மற்றும் சமந்தா இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இவரது 'தி ஃபேமிலி மேன்' தொடரின் இரண்டாவது சீசனில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் பின்னர், இவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் இன்றைய தினம் நடிகை சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு இடையே திருமணம் நடைபெற்றுள்ளது.

Actress Samantha

 

சமந்தா மற்றும் ராஜ் திருமண புகைப்படங்கள்:

 

அதன்படி, இவர்கள் திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இப்புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

மேலும் படிக்க: The Family Man Season 3: தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் மூன்றாவது சீசன்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

ராஜ் நிடிமோருவின் நிகர சொத்து மதிப்பு:

 

ராஜ் நிடிமோருவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ஏறத்தாழ ரூ. 90 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. திரைப்பட தயாரிப்பு மற்றும் இயக்கம் மூலமாக வருமானம் ஈட்டும் இவர், தொடர்ந்து ஓடிடி மற்றும் சினிமா துறையில் இயங்கி வருகிறார். 'சிட்டாடெல்: ஹனி பன்னி' போன்ற முக்கிய இணையத் தொடர்கள் இவரை மேலும் பிரபலப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: instagram

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com