Dude twitter review: தீபாவளியை முன்னிட்டு ட்யூட் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க: Lokah OTT release: வசூல் சாதனை படைத்து பெரும் வரவேற்பை பெற்ற லோகா திரைப்படம்; எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
முன்னதாக லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக பிரதீப் ரங்கநாதன் உருவாகி இருக்கிறார். இதனால், இப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. மேலும், பிரேமலு திரைப்படம் மூலம் நன்கு அறியப்பட்ட மமிதா பைஜூவும் இப்படத்தில் இணைந்ததால் இதன் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இவர்களை தவிர முன்னணி நடிகரான சரத்குமாரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட ட்யூட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்து ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Jailer 2 movie: ஜெயிலர் 2 எப்போது ரிலீஸ்? அப்டேட் கொடுத்த ரஜினி - உற்சாகத்தில் ரசிகர்கள்
வெங்கி ரிவ்யூ என்ற ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "ரொமான்ஸ் காமெடி வகையில் உருவாக்கப்பட்டுள்ள ட்யூட் திரைப்படத்தின் முதல் பாதி சிறப்பாக அமைந்துள்ளது. தொடக்கத்தில் படம் மெதுவாக நகர்ந்தாலும், இடைவேளைக்கு முந்தைய கட்டத்தை நெருங்கும் போது ரசிகர்களை கவரும் நோக்கில் நகர்கிறது. இரண்டாம் பாதியின் தொடக்கம் நன்றாக இருந்தாலும், அதனை முழுமையாக தக்கவைக்கவில்லை. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் இயக்கம் நன்றாக இருந்தும் கூட, இரண்டாம் பாதியின் திரைக்கதை தொய்வடைந்தது.
#Dude A Mid Rom-Com with a Fairly Engaging First Half but a Lackluster Second Half!
— Venky Reviews (@venkyreviews) October 17, 2025
The film hits all the familiar beats of a typical rom-com. The first half starts off a bit slow but picks up well toward the pre-interval, ending with a well-executed interval block. However, the…
பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். சாய் அபயங்கரின் இசையும் நன்றாகவே உள்ளது. படத்தின் எடிட்டிங் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். உணர்வுப்பூர்வமான காட்சிகள் இப்படத்தில் சரியாக பொருந்தவில்லை. காமெடியும் ஓரிரு இடங்களில் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் படத்தின் முதல் பாதி சிறப்பாக இருந்ததை போன்று, இரண்டாம் பாதிக்கும் திரைக்கதை அமைத்திருக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#Dude - PR’s Style, his combo with Mamitha Nice. Sarathkumar shines in versatile role. Hridhu Gud addition. Music ok. Slow start, Interval block 20Mins ROFL. Final act could have been better. Though less emotional connect, Humour drives d narration to an extent. ONE TIME WATCH!
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 17, 2025
கிறிஸ்டோஃபர் கனகராஜ் என்பவரது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "பிரதீப் ரங்கநாதனின் ஸ்டைலில் ட்யூட் படம் அமைந்துள்ளது. மமிதா பைஜூவுடனான அவரது காம்பினேஷன் நன்றாக உள்ளது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் சரத்குமார் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் மெதுவாக ஆரம்பித்தாலும் இடைவேளை மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாக, காமெடி நன்றாக பொருந்தி இருக்கிறது. படத்தின் இரண்டாம் பாதி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
In #Dude #PradeepRanganathan swag, attitude and humour are superb💯 He completely holds the audience with his performance👏 He rocked the show 👍 Even in the emotional sequences, he carried it well. His dance in Oorum Blood 👌 Another hit ⌛ for him 🎯 pic.twitter.com/sMLWKPV7nv
— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) October 17, 2025
மேலும் சுகுமார் ஸ்ரீனிவாசன் என்பவரது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு நன்றாக உள்ளது. தனது நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்திருக்கிறார். காமெடி மட்டுமின்றி உணர்ச்சிப்பூர்வமான நடிப்பையும் சரியாக வழங்கி இருக்கிறார். பாடல் காட்சிகளில் அவரது நடனம் தனித்து தெரிகிறது. இப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு நிச்சயம் வெற்றிப் படமாக அமையும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com