
Lokah OTT Release Date: கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், டொமினிக் அருண் இயக்கத்தில், துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான லோகா சாப்டர் 1: சந்திரா (Lokah Chapter 1: Chandra) திரைப்படம், இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க: Kantara Chapter 1 OTT release: ஓடிடியில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
சமீபத்தில் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி சுமார் ரூ. 300 கோடி வசூலித்து சாதனை படைத்த திரைப்படம் லோகா சாப்டர் 1: சந்திரா (Lokah Chapter 1: Chandra). குறிப்பாக, மலையாளத்தில் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே அதிகப்படியாக வசூலித்த திரைப்படமாக லோகா சாப்டர் 1: சந்திரா (Lokah Chapter 1: Chandra) அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
கேரளாவின் புராணக் கதைகளை அடிப்படையாக கொண்டு சூப்பர்ஹீரோ பாணியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், நஸ்லென், சாண்டி மாஸ்டர், அருண் குரியன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இவர்களை தவிர முன்னணி நடிகர்களான டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்தனர்.

இந்த திரைப்படம் ரூ. 30 கோடி பொருட்செலவில் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டது. லோகா சாப்டர் 1: சந்திரா (Lokah Chapter 1: Chandra) திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக இப்படத்தின் அடுத்த பாகம் தொடர்பான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. அதன்படி, இப்படத்தின் அடுத்த பாகத்தில் டொவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, லோகா சாப்டர் 1: சந்திரா (Lokah Chapter 1: Chandra) திரைப்படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த வகையில், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று (அக்டோபர் 31) லோகா சாப்டர் 1: சந்திரா (Lokah Chapter 1: Chandra) திரைப்படம் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்திய அளவில் இப்படம் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதன் மூலம் திரையரங்கில் லோகா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, ஓடிடி வெளியீட்டின் போதும் கிடைத்துள்ளதை உணர முடிகிறது.
Lokah Chapter 1: Chandra is now streaming exclusively on JioHotstar. @DQsWayfarerFilm @dulQuer @kalyanipriyan @naslen__ @NimishRavi @SanthyBee#Lokah #LokahChapter1 #Wayfarerfilms #DulquerSalmaan #DominicArun #KalyaniPriyadarshan #Naslen #SuperheroFantasy #Lokahthefilm… pic.twitter.com/PQscs9ThD5
— JioHotstar Malayalam (@JioHotstarMal) October 30, 2025
மேலும், இனி வரும் நாட்களிலும் லோகா சாப்டர் 1: சந்திரா (Lokah Chapter 1: Chandra) திரைப்படம் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Youtube
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com