
Kantara Chapter 1 OTT release: காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1) திரைப்படத்தின் ஓடிடி வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பான் இந்தியன் திரைப்படமாக காந்தாரா சாப்டர் 1 வெளியானது. முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான காந்தாரா படத்தின் ப்ரீகுவலாக (முந்தைய பாகம்) இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

ஹோம்பாலே ஃபில்ம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ருக்மிணி வசந்த, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
காந்தாரா சாப்டர் 1 ஓடிடி ரிலீஸ்:
சுமார் ரூ. 125 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், ஏறத்தாழ ரூ. 800 கோடி வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக, கன்னட திரையுலகில் அதிக செலவில் உருவாக்கப்பட்ட படங்களில் இப்படம் இடம்பெற்றது.

வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பார்வையாளர்களின் வரவேற்பை காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் பெற்றது. திரையில் அதன் பிரம்மாண்டம் மிகச் சிறப்பாக இருந்ததாக பலரும் கூறினர். இதனால் காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
get ready to witness the LEGENDary adventure of BERME 🔥#KantaraALegendChapter1OnPrime, October 31@hombalefilms @KantaraFilm @shetty_rishab @VKiragandur @ChaluveG @rukminitweets @gulshandevaiah #ArvindKashyap @AJANEESHB @HombaleGroup pic.twitter.com/ZnYz3uBIQ2
— prime video IN (@PrimeVideoIN) October 27, 2025
இந்நிலையில், அக்டோபர் 31-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை ஓடிடியில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். மேலும், திரையரங்கில் வெளியான போது இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஓடிடி வெளியீட்டின் போதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: YouTube
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com