
Nivetha Thomas Photos: நடிகை நிவேதா தாமஸ், தனது புகைப்படங்கள் ஏ.ஐ மூலம் தவறாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாக தெரிவித்துள்ளார். இது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீப நாட்களாக பல நடிகைகளின் புகைப்படங்களை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் தவறாக சித்தரித்து அவதூறு பரப்பும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற செயல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றன என்று அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருந்தார். இதேபோல், தன்னுடைய புகைப்படங்களும் ஏ.ஐ கொண்டு தவறாக சித்தரிக்கப்பட்டதாக நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை நிவேதா தாமஸ் சில நாட்களுக்கு முன்பு தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, அந்த புகைப்படத்தை போன்று போலியான புகைப்படங்கள் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்டன. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இச்சம்பவம் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் போலியாக உருவாக்கப்பட்டவை என்று நடிகை நிவேதா தாமஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
— Nivetha Thomas (@i_nivethathomas) August 28, 2025
மேலும் படிக்க: Actress Anupama Parameswaran: நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மார்பிங் புகைப்படங்களை வெளியிட்டு அவதூறு; தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கைது
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். முன்னதாக, தமிழில் வெளியான மை டியர் பூதம் (My dear Bootham) என்ற தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக நிவேதா தாமஸ் நடித்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக இவர் நடித்துள்ளார். தமிழில், நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, தர்பார், பாபநாசம் போன்ற திரைப்படங்கள் மூலம் நிவேதா தாமஸ் கவனம் ஈர்த்தார். தனது நடிப்பு திறமை மூலம் பல்வேறு விருதுகளையும் நிவேதா தாமஸ் வென்றுள்ளார்.
மேலும் படிக்க: Gouri Kishan: உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்; உருவக் கேலிக்கு எதிராக நடிகை கௌரி கிஷன் பதிலடி
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய போலி ஏ.ஐ புகைப்படங்கள் குறித்து தனது தரப்பில் இருந்து அறிக்கையை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ளார். அதில், "சமூக ஊடகங்களில் நான் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படத்தை பயன்படுத்தி, ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் தவறான ரீதியில் உருவாக்கப்பட்ட படங்கள் இணையத்தில் பரப்பப்படுவது எனது கவனத்திற்கு வந்துள்ளது.
எனது அனுமதியின்றி இது போன்ற புகைப்படங்களை உருவாக்குவதும், பரப்புவதும் மிகவும் வேதனைக்குரியது, ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சட்டவிரோதமானது. இது டிஜிட்டல் ஆள்மாறாட்டம் (Digital Impersonation) மற்றும் எனது தனிப்பட்ட உரிமையை மீறும் கடுமையான செயலாகும்.
It has come to my attention that AI-generated images misusing my identity and a recent photograph I shared on my social media are being circulated online.
— Nivetha Thomas (@i_nivethathomas) December 17, 2025
The creation and circulation of such content without consent is deeply disturbing, unacceptable, and unlawful. It…
இதற்கு காரணமானவர்களும், முகவரியற்ற சமூக ஊடக கணக்குகளுக்கு பின்னால் மறைந்து செயல்படுபவர்களும் உடனடியாக இதை நிறுத்தி, சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
இத்தகைய செயல்களுக்கு துணைபோவதால் ஏற்படும் பாதிப்பை பொதுமக்கள் உணர வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அத்தகைய படங்களை பகிரவோ அல்லது எந்த வகையிலும் ஊக்குவிக்கவோ வேண்டாம்.
இதை மீறியும் தொடர்ந்து பரப்பினால், அது எனது அடையாளத்தை வேண்டுமென்றே தவறாக பயன்படுத்தும் செயலாக கருதப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com