
தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக நடிகைகளாக வலம் வருபவர்கள் யாரும் நிலைத்து நிற்பதில்லை. ஒரிரு படங்களிலேயே எங்கிருக்கிறார்கள்? என்று சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அவர்களுக்குக் குறைந்துவிடுகிறது. இதையடுத்து இளம் நடிகைகள் தங்களை ரசிகர்களின் முன்னிலையில் தக்கவைத்துக் கொள்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு வாய்ப்பாக உள்ளது சோசியல் மீடியாக்கள். இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் தளம் போன்றவற்றில் தாங்கள் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறோம் என்று அடிக்கடி காட்டிக்கொள்வார்கள். அந்த வரிசையில் தன்னுடைய கிளாமர் புகைப்படத்தின் மூலம் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ள இளம் நடிகை தான் திவ்ய பாரதி.
கடந்த 2021 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. தமிழில் அறிமுகமான தன்னுடைய முதல் படத்திலேயே கவர்ச்சியாக நடித்து ஒட்டு மொத்த தமிழ் இளைஞர்களைத் தன் வசம் படுத்திக்கொண்டார். ஆனால் இத்திரைப்படத்திற்கு அடுத்து எவ்வித வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் சின்ன ரோலில் நடித்திருப்பார்கள். பின்னர் தெலுங்கு திரையுலகில் தன்னுடைய ஆர்வத்தைக் காட்டினார்.
View this post on Instagram
சினிமா வாய்ப்புகள் அதிகம் கிடைக்கப்பெறவில்லையென்றாலும் சோசியல் மீடியாவின் வாயிலாக அவ்வப்போது தன்னைப் பற்றி சமீபத்திய தகவல்களைப் பதிவிட்டுவருகிறார். கண்களைக் கவரும் சேலைகள், கிளாமரை அதிகம் வெளிப்படுத்தும் விதமாக ஹாட் புகைப்படங்கள் என அவ்வப்போது பதிவிட்டு வரும் இந்த நடிகை, தற்போது நீல நிற பிகினி உடை அதாவது பாடிகான் உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: web series : மிஸ் செய்யக்கூடாத சிறந்த தமிழ் வெப் சீரிஸ்
பராம்பரிய உடை அணிவது முதல் கிளாமர் உடை என தனக்கு எது பிடிக்குமோ? அதை வைராக்கி வரும் திவ்ய பாரதியின் பாடிகான் ஆடையில் எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகிற்து. டிசம்பர் 7 ல் அதாவது நேற்று புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் இதுவரை 2 லட்சத்திற்கு அதிமான நபர்கள் லைக் செய்துள்ளனர். இதோடு “ உண்மையிலேயே நீங்கள் மிகவும் ரொம்ப அழகாக உள்ளீர்கள், சூப்பர், ரொம்ப அழகு” என்பது போன்ற கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Image source - Insatagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com