இந்த ஆகஸ்ட் முதக் மாதத்தில் புதிதாக வெளியாக இருக்கும் படங்கள் என்ன என்பதை பார்க்கலாம். குறிப்பாக இந்த வாரத்தில் வெளியாக இருக்கும், பல எதிர்பார்ப்புகளை உருவாக்கிய 3 முக்கிய படங்கள், எந்த ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்ற முழு விவரங்களையும் பார்க்கலாம். இன்றைய பிசியான வாழ்க்கை முறையால் மக்களின் அதிகப்படியான பொழுதுப்போக்கு ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்பதாகும். அவற்றில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படங்களின் விவரங்களை பார்க்கலாம்.
சிவா நடிப்பில் வெளியாகும் பறந்து போ
சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரியான், அஞ்சலி, போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ள மிகவும் நகைச்சுவையான படமாகும். ராம் நடிகர் சிவாவுடன் இணைந்து ஒரு நகைச்சுவை நாடகப் படத்தை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார் இந்த படத்தில். நனது பிள்ளையில் தேவைகளை நிறைவேற்ற பாடுப்படும் தந்தையாக சிவா நடித்துள்ளார், மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இசை மற்றும் பின்னணி இசையை சந்தோஷ் தயாநிதி மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் அமைத்துள்ளனர் , ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே என்.கே. ஏகாம்பரம் மற்றும் மதி வி.எஸ். ஆகியோர் கையாண்டுள்ளனர் . இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் விரிவாக படமாக்கப்பட்டது . ஆகஸ்ட் 5 ஜியோ ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: ரோந்து விமர்சனம் : நேர்மையாக பணி செய்யும் காவல் அதிகாரிகளுக்கு கிடைக்கும் பரிசு
மாமன்
மாமன் படம் மே 16 , 2025-இல் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்திற்கு நடிகர் சூரி கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூரி, ஐஸ்வர்யா இலட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா போன்ற பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துல்ளனார். தாய்மாமனுக்கும் மருமகனுக்குமான ஆத்மார்த்தமான அன்பை மையப்படுத்தியும் அதற்குள் குடும்ப சென்டிமென்டைத் தூக்கலாகவும் கலந்து எழுதிய கதையை இயல்பாகப் படமாக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது.
மாயக்கூத்து
மாயக்கூத்து என்பது 2025 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி குற்ற நாடக கற்பனைத் திரைப்படமாகும், இது ஏ.ஆர். ராகவேந்திரா இயக்கியது. ராகுல் தேவா மற்றும் பிரசாத் ராமச்சந்திரன் ஆகியோரால் ராகுல் மூவி மேக்கர்ஸ் மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் ஆகியோர் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: மகாவதார் நரசிம்மா விமர்சனம் : ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் தரத்தில் இந்திய அனிமேஷன் படம்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation