ஷாகி கபிர் இயக்கத்தில் ரோஷன் மேத்யூ, திலீஷ் போத்தன் நடிப்பில் ஜூன் மாதம் வெளிவந்த படம் ரோந்து. மலையாள படமான ரோந்து ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஜூலை 22ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. லட்சுமி மேனன், கிரிஷா குரூப் இப்படத்தில் நடித்துள்ளனர். அனில் ஜான்ஸன் ரோந்து படத்திற்கு இசையமைத்துள்ளார். க்ரைம், யதார்த்த படங்களை திரையில் காட்சிப்படுத்துவதில் கேரள சேட்டன்கள் கெட்டிக்காரர்கள். ரோந்து படம் எப்படி இருக்கிறது ? வாருங்கள் பார்ப்போம். மலையாள மொழியிலேயே இப்படத்தை பாருங்கள்.
இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் இரண்டு காவல் அதிகாரிகள் சந்திக்கும் சவால்கள் என்ன ? சிறு தவறு கூட பெரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை ரோந்து படத்தில் காண்பித்துள்ளனர்.
25 கால அனுபவம் கொண்ட திலீஷ் போத்தனுடன் ஆறு மாத அனுபவம் கொண்ட ரோஷன் மேத்யூ இரவு நேர ரோந்து பணிக்கு செல்கிறார். இரவு நேர கண்காணிப்பு, அசம்பாவிதங்களை தடுப்பது இருவரின் பொறுப்பு. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் எதோ ஒரு பிரச்னை வந்து கொண்டே இருக்கிறது. தற்கொலை சம்பவம் முதல் ஆள் கடத்தல் வரை ஒவ்வொரு பிரச்னையிலும் திலீஷ் போத்தன் அனுபவத்தோடு அணுகுகிறார். பயந்த சுபாவம் கொண்ட ரோஷன் மேத்யூ சிறு சிறு தவறுகளை செய்து கொண்டே இருக்கிறார். இறுதியில் பெரிய பிரச்னையில் மாட்டிக் கொள்கின்றனர். இரவுப் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் வாழ்க்கையை 2 மணி நேர படமாக எடுத்துள்ளனர்.
இறுதி பத்து நிமிடங்களை சட்டென முடித்துவிட்டனர். அதை இன்னும் தெளிவாக எடுத்திருக்கலாம்.
நேர்மையாக பணியாற்றினால் அதற்கு கிடைக்கும் பரிசு அநீதி. நல்ல படம் பார்த்த அனுபவத்தை ரோந்து தருகிறது. படத்தில் லட்சுமி மேனன் அடையாளம் தெரியாதது வருத்தமே.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com