இந்த வாரம் உங்கள் விடுமுறை நாளை வீட்டில் இருந்தி சிறப்பாக கழிக்க ஓசித்தால். உங்களுக்காகவே ஓடிடியில் வெளியாக இருக்கிறது சிறந்த தமிழ் படங்கள். நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கும் முக்கியமான இரண்டு படங்கள் மற்றும் தொடங்கள் பற்றி பார்க்கலாம். இந்த படங்கள் பார்க்க ஏன் ஆர்வம் இருக்கிறது என்றால் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியதால் இந்த படங்கள் எப்போது ஓடிடியில் வெளியாகும் என மக்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்தனர். எந்த படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு பின் ஓடிடியில் வெளியாகிறது. இந்த படம் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த கணவன், மனைவி இடையில் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் படமாக இருக்கிறது. சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் இப்படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கணவன், மனைவி இடையில் உருவாகும் சண்டையை வெளிப்படுத்தும் விதமாக இருந்தாலும், படம் முழுக்க நகைச்சுவையாக எடுத்திருப்பது படத்திற்கு பலமாக அமைத்திருக்கிறது. ஆகஸ்ட் 22 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் இந்தப் படம் கண்டிப்பாக மக்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும். குடும்பத்திற்குள் தம்பதியினர் எதிர்கொள்ளும் சவால்களை அழகாக நகைச்சுவையான சொல்லியிருக்கும் இந்த படம் மக்களுக்கு நல்ல விருந்தாக அமைகிறது.
மேலும் படிக்க: அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருக்கும் இந்த வார தமிழ் ஓடிடி படங்கள்
வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் என இரண்டு நடிகர் ஜாம்பவான் நடிப்பில் வெளிவந்த படம் ”மாரீசன்”. நகைச்சுவை, பரபரப்புடன் இருக்கும் இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் கதையினை வி. கிருஷ்ணா மூர்த்தி எழுத சுதீசு சங்கர் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆர். பி. சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்சு நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் தலைமையிலான நட்சத்திர நடிகர்கள் குழுவுடன் ஆகஸ்ட் 22 முதல் நெட்ஃபிளிக்ஸில் மாரீசன் திரைப்படம் வெளியாகிறது.
கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் மற்றும் ஆதித்யா ஷிவ்பிங்க் ஆகியோர் நடித்திருக்கும் திரில்லர் படமாகும். இந்த படம் நிஜ வாழ்க்கையின் தந்தை மகள் கூட்டணியின் இணைந்து நடித்திருக்கும் அழகிய படமாகும். இந்தப் படம் கீர்த்தி, அருண் பாண்டியன் மற்றும் ஆதித்யா ஷிவ்பிங்க் ஆகிய மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதையாகும். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் கோவிந்தராஜன், இசையமைப்பாளர் பரத் வீரராகவன், எடிட்டர் தேவத்யன், கலை இயக்குநர் ராஜா, ஸ்டண்ட் இயக்குநர் பிசி ஸ்டண்ட்ஸ் மற்றும் பிரபல ஒடிசி பயிற்றுவிப்பாளர் கங்காதர் நாயக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இசையமைத்தவர் பரத் வீரராகவன். ஆகஸ்ட் 15, 2025 முதல் அஃகேனம் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க: கூலி பட நடிகர்களின் சம்பளம்: ரஜினிகாந்த் முதல் ஆமீர் கான் வரை பல கோடிகளில் ஊதியம் பெற்ற ஸ்டார் ஹீரோக்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com