herzindagi
image

இந்த வாரம் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ ஓடிடியில் எதிர்பார்ப்புக்களுடன் வெளியாக இருக்கும் 3 தமிழ் படங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாள் விடுமுறை இருக்கும் காரணத்தால் மக்கள் ஓடிடியில் எந்த படம் வெளியாக இருக்கிறது இன்று அவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதோ உங்களுக்காக இந்த வாரம் தமிழ் படங்கள்.
Editorial
Updated:- 2025-08-14, 18:01 IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரமாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் கூலி. இந்த படத்தை எதிர் நோக்கி இந்திய மக்கள் காத்திருக்கும் நிலையில், இந்த மூன்று நாள் விடுமுறையில் எந்த படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்பதையும் மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். திரையரங்குகளில் வெளியாக சில நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாவது வழக்கம். இதில் குறிப்பாகப் பிறமொழி படங்களும் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும், இது போன்று பிற மொழி படங்களையும் தமிழில் எளிதாக ஓடிடியில் பார்க்கலாம். இந்த வகையில் தமிழில் வெளியாக இருக்கும் படங்கள் மற்றும் தொடர்கள் என்ன என்பதை பார்க்கலாம். 

மாயசபா தொடர்

 

மாயசபா பல மொழிகளில் வெளியான அரசியல் த்ரில்லர் தொடராகும். இந்த தொடரில் முழுக்க அரசியலில் இருக்கும் சூட்சமங்களை வெளிப்படையாக சொல்லும் கதையாக இருக்கிறது, இந்த தொடர் SonyLIV இல் ஆகஸ்ட் 7, 2025 ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக பார்வையாளர்களால் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இந்த தொடர் வெளியிடப்பட்டுள்ளது.

mayasaba series

 

குட் டே தொடர்

 

2025 ஆம் ஆண்டு தமிழ் த்ரில்லர் நாடகமான குட் டே ஆகஸ்ட் 15 முதல் SunNXT இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அறிமுக இயக்குனர் பிரிதிவிராஜ் ராமலிங்கம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஒரு நாள் இரவு பகலில் நடிக்கும் சம்பவத்தை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் எதிர்கொள்ளும் சம்பவங்களை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். அவரைத் தவிர, குட் டே படத்தில் மைனா நந்தினி, முருகதாஸ், காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

 

மேலும் படிக்க: கூலி பட நடிகர்களின் சம்பளம்: ரஜினிகாந்த் முதல் ஆமீர் கான் வரை பல கோடிகளில் ஊதியம் பெற்ற ஸ்டார் ஹீரோக்கள்

ஓஹோ எந்தன் பேபி

 

ஓஹோ எந்தன் பேபி 2025 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குநராக அறிமுகமாகி முகேஷ் மஞ்சுநாத் மற்றும் சாரதா ராமநாதன் ஆகியோரால் எழுதப்பட்டது. இதில் ருத்ரா மற்றும் மிதிலா பால்கர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் முறையே நடிப்பு மற்றும் தமிழில் அறிமுகமாகின்றனர். இந்த படத்தில் ருத்ராவின் உறவினர் விஷ்ணு விஷாலும் நடிக்கிறார். இவர் ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கே.வி. துரையின் குட் ஷோவுடன் இணைந்து தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸின் கீழ் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், கஸ்தூரி மற்றும் வைபவி டான்டில் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 8, 2025 முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

ohh enthan baby

 

மேலும் படிக்க: கூலி படத்தில் ரஜினிகாந்திற்கு பேசப்பட்ட சம்பளத்தின் மதிப்பு இவ்வளவா?

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com