இந்த வாரம் உங்கள் விடுமுறை நாளை வீட்டில் இருந்தி சிறப்பாக கழிக்க நினைத்தால். உங்களுக்காகவே ஓடிடியில் வெளியாக இருக்கிறது சிறந்த தமிழ் படங்களை பார்த்து மகிழுங்கள். நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோவில் மற்றும் தமிழில் இருக்கும் பிற ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த படங்கள் மற்றும் தொடங்கள் என்ன என்பதை பார்க்கலாம். இந்த படங்கள் பார்க்க ஏன் ஆர்வமாக மக்கள் இருக்கிறார்கள் என்றால் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியதால் இந்த படங்கள் எப்போது ஓடிடியில் வெளியாகும் என மக்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்தார்கள். எந்த படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம்.
2015 ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான தமிழ் படம், குற்றத் திரில்லராக இருக்கும். அறிமுக இயக்குனர் கௌதமன் கணபதி இயக்கியது மற்றும் எழுதியது இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தர்ஷனுக்கு முக்கியமான படமாக இது இருக்கும், இதில் லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலி கான் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அதன் திரையரங்கு ஓட்டத்தைத் தொடர்ந்து, சரண்டர் OTT இல் சன் NXT இல் 4 செப்டம்பர் 2025 முதல் திரையிடப்பட்டது.
மேலும் படிக்க: விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று வசூல் சாதனை படைத்த கன்னட திரைப்படம்; ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
பன் பட்டர் ஜாம் திரைப்படம் ராஜு ஜெயமோகன் நடிப்பில் வெளியாகியுள்ள நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாகும். இந்த படத்தை ராகவ் மிர்தாத் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராஜு ஜெயமோகன், ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், விக்ராந்த், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி, மைக்கேல் தங்கதுரை மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். பிரசன்னா இசையமைத்துள்ளார், பாபு குமார் IE ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பு செய்துள்ளார். செப்டம்பர் 5, 2025 அன்று பிரைம் வீடியோவில் டிஜிட்டல் முறையில் அறிமுகமானது, இது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கில் பிராமண்டமாக வெளியான புராண கதையாகும். இது ஜூன் 27, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முகேஷ் குமார் சிங் இயக்கிய மற்றும் விஷ்ணு மஞ்சு நடித்த இந்தப் படம், திண்ணாடு என்ற பழங்குடி நாத்திகரின் புராண பயணத்தை சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் முக்கிய மற்றும் சிறப்பு வேடங்களில் நடித்துள்ளனர். கன்னப்ப செப்டம்பர் 4, 2025 முதல் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய பல மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும் என்று பிரைம் வீடியோ அறிவித்தது.
மேலும் படிக்க: கண்ணப்பா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு; எங்கு, எப்போது பார்க்கலாம்?
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com