Maareesan movie OTT Release: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற மாரீசன் திரைப்படம், வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில், வடிவேலுவும், ஃபஹத் ஃபாசிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்தனர்.
மேலும் படிக்க: Coolie Vs War 2 box office collection: வசூலில் வார் 2-வை முந்தியதா கூலி? பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் முழு விவரம் இதோ!
முன்னதாக, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தில், வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திரங்களுக்கு பார்வையாளர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக் கூட்டணியுடன் மாறுபட்ட கதை களத்தில் உருவான திரைப்படம் தான் மாரீசன்.
மாரீசன் திரைப்படத்தின் கதை சுருக்கம்:
சிறிய அளவிளான திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வரும் தயாளன் (ஃபஹத் ஃபாசில்) பாளையங்கோட்டை சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். சிறையில் இருந்து விடுதலையான சில மணி நேரங்களிலேயே மீண்டும் தனது திருட்டு செயல்களில் ஈடுபடுகிறார். அந்த வகையில், இருசக்கர வாகனத்தை திருடி விட்டு, அதில் செல்லும் போது ஒரு வீட்டிற்குள் திருட முயல்கிறார்.
அந்த வீட்டில் நுழைந்த போது, வேலாயுதம் (வடிவேலு) என்பவர் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறார். திருடுவதற்காக வந்த தயாளனிடம், தனக்கு அல்சைமர் நோய் இருப்பதால் தன்னை வெளியே செல்ல விடாமல், வீட்டிற்குள்ளேயே தன்னுடைய மகன் கட்டி வைத்திருப்பதாக வேலாயுதம் கூறுகிறார். மேலும், தன்னை விடுவித்து வெளியே விட்டால் ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்து தருவதாக தயாளனிடம் கூறுகிறார்.
அப்போது, வேலாயுதத்தின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கான பணம் இருப்பதை அறிந்து கொண்ட தயாளன், வேலாயுதத்தின் நம்பிக்கையை சம்பாதித்து, அவரது ஏ.டி.எம் பாஸ்வேர்டை அறிந்து கொண்டு பணத்தை திருட திட்டம் தீட்டுகிறார். இதனால், வேலாயுதம் செல்ல வேண்டிய இடங்களுக்கு தனது இருசக்கர வானகத்திலேயே தயாளன் அழைத்துச் செல்கிறார். வேலாயுதத்தின் பணத்தை தயாளன் திருடினாரா? வேலாயுதத்திற்கு இறுதியில் என்ன ஆனது? என்பதற்கான கேள்விகளுக்கு படத்தின் இரண்டாம் பாதி விடை சொல்கிறது.
மேலும் படிக்க: பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் குறித்து விரிவான பார்வை
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் மாரீசன்:
மேலோட்டமாக பார்த்தால் ஒரு ஃபீல் குட் சினிமாவாக தோற்றமளிக்கும் இப்படம், இடைவெளியின் போது தெரிய வரும் ட்விஸ்ட் மூலம் மாற்று திசையில் பயணிக்க தொடங்குகிறது. சிக்கலான திரைக்கதையை பார்வையாளர்களுக்கு எளிதாக புரியும்படி வடிவமைத்திருந்ததால், இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, வடிவேலு மற்றும் ஃப்ஹத் ஃபாசிலின் நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. ஒரு திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில் இருக்கிறார் என்றால், மற்ற நடிகர்களை விட அவரே தனித்து தெரிவார். ஆனால், இதில் வடிவேலுவின் உணர்ப்பூர்வமான நடிப்பு பார்வையாளர்களை அசரடித்துள்ளது.
சுதீஷ் சங்கரின் இயக்கத்தில் ஏற்கனவே திரையரங்குகளில் இப்படம் வெளியான போது, நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையும் பக்கபலமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, மாரீசன் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். அதன்படி, இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாரீசன் திரைப்படம் வெளியாகிறது. ஏற்கனவே, திரையரங்கில் இப்படத்தை பார்த்தவர்களும், முதன்முறையாக ஓடிடியில் பார்க்க தயாராக இருப்பவர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். தியேட்டரில் வெளியான போது இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, ஓடிடி ரிலீஸின் போது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation