நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. திராவிட வெற்றிக் கழகம் என்ற வாசகம் எழுதப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள அபிராமி, அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: OG movie box office collection day 1: 'ஓஜி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? பாக்ஸ் ஆஃபீஸில் சாதனை படைக்கும் பவன் கல்யாண்
மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட அபிராமி, கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'Ctrl Alt Delete' என்ற வெப் தொடர் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'நோட்டா' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அபிராமி நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ் மற்றும் நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு அபிராமியின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அந்த ஆண்டில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பலரது கவனத்தையும் அபிராமி ஈர்த்தார். இது தவிர அதே ஆண்டு அஜித்குமார் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அபிராமி நடித்தார். இதில் அவரது நடிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் கிடைத்தது.
மேலும், 'இரு துருவம்' என்ற வெப் தொடரிலும் கதாநாயகியாக அபிராமி வெங்காடசலம் நடித்தார். இவை மட்டுமின்றி மேலும் சில படங்களிலும் நடிப்பதற்கு அபிராமி ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தெரிகிறது. அதன்படி, பிஸியான நடிகையாக அபிராமி வெங்காடசலம் வலம் வருகிறார்.
மேலும் படிக்க: Nivetha pethuraj: காதலரை அறிமுகப்படுத்திய நடிகை நிவேதா பெத்துராஜ்; வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் ஆச்சரியம்!
இந்நிலையில், நடிகை அபிராமி வெங்காடசலத்தின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு பலரிடயே கேள்வி எழுப்பி இருக்கிறது. அரசியல்வாதி போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கும் ஒரு புகைப்படத்தை நடிகை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, அந்தப் புகைப்படத்தில் திராவிட வெற்றிக் கழகம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சி தொடங்கி, முழு நேர அரசியல்வாதியாக களத்தில் இறங்கி இருக்கிறார்.
அதன்படி, விஜய் பாணியில் நடிகை அபிராமியும் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறாரா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. எனினும், இது அவருடைய அடுத்த வெப் தொடர் அல்லது திரைப்படத்தின் தொடக்கமாக இருக்கலாம் என்றும் சிலர் கருத்து கூறுகின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அப்பதிவில் நடிகை அபிராமி பதிவிட்டுள்ளார். அதனை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com