Kantara Chapter 1 box office collection: ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படம், முதல் நாளிலேயே ரூ. 60 கோடி வசூலித்து, இந்திய அளவில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்த வசூல் 'சய்யாரா' மற்றும் 'சாவா' போன்ற பாலிவுட் படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது.
மேலும் படிக்க: OG movie twitter review: பவன் கல்யாண் ரசிகர்களுக்கு விருந்து வைத்ததா 'ஓஜி' திரைப்படம்? ட்விட்டர் விமர்சனம் இதோ
2022-ல் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற 'காந்தாரா' திரைப்படத்தின் ப்ரீகுவல் (முந்தைய பாகம்) தான், 'காந்தாரா: சாப்டர் 1' (Kantara: Chapter 1). இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களுள் ஒன்றான 'காந்தாரா: சாப்டர் 1', தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 2-ஆம் தேதி வெளியானது. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான கன்னட திரைப்படங்களில் இதுவும் ஒன்று. அதன்படி, பான்-இந்தியா அளவில் வெளியான 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது.
ஆரம்பகட்ட தகவலின்படி, 'காந்தாரா: சாப்டர் 1' வெளியான முதல் நாளிலேயே இந்திய அளவில் ரூ. 60 கோடி வசூலித்துள்ளது. இதில், இந்தி மொழியில் மட்டும் சுமார் ரூ. 19-21 கோடியை வசூல் செய்து, வட இந்தியாவிலும் தன் பலத்தை நிரூபித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இப்படம் ரூ. 65 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
'காந்தாரா: சாப்டர் 1' படத்தின் இந்த முதல் நாள் வசூல், இந்த ஆண்டு வெளியான பல்வேறு முக்கிய திரைப்படங்களின் ஆரம்ப வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. குறிப்பாக, 'சய்யாரா' (ரூ. 22 கோடி), 'சிக்கந்தர்' (ரூ. 26 கோடி), 'சாவா' (ரூ. 31 கோடி) போன்ற பாலிவுட் திரைப்படங்களின் வசூலை எல்லாம் முறியடித்து, இந்த பிரம்மாண்ட வெற்றிப் பட்டியலில் ரிஷப் ஷெட்டி இடம்பிடித்துள்ளார். மேலும், இதன் வசூல் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தின் முதல் நாள் வசூலை (ரூ. 65 கோடி) நெருங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Madharaasi ott release: ஓடிடியில் வெளியாகும் மதராஸி திரைப்படம்; எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?
ஹோம்பாலே ஃபில்ம்ஸ் (Hombale Films) சார்பில் விஜய் கிரகந்தூர் மற்றும் சலுவே கௌடா தயாரித்த இப்படத்தை, ரிஷப் ஷெட்டி இயக்கி, தானே கதாநாயகனாக நடித்துள்ளார். முன்னதாக, 2022-ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்திற்காக ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், அப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றது.
'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்ய, பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். மேலும், எடிட்டிங் பணிகளை சுரேஷும், தயாரிப்பு வடிவமைப்பை பங்லானும் கையாண்டுள்ளனர்.
முதல் நாளிலேயே பிரம்மாண்டமாக வசூலித்த 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படம், இனி வரும் நாட்களில் கூடுதலாக வசூலிக்கும் என்று திரையுலக வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: YouTube
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com