herzindagi
image

Diesel OTT Release Date: ஓடிடியில் வெளியாகும் ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Diesel OTT Release Date: ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவான டீசல் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2025-11-19, 11:54 IST

Diesel OTT Release Date: நடிகர் ஹரிஷ் கல்யாண், ஆக்‌ஷன் ஹீரோ அவதாரத்துடன் நடித்த டீசல் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான டீசல் திரைப்படம்:

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டீசல். இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முன்னதாக, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றன.

 

குறிப்பாக, பார்க்கிங் திரைப்படத்தில் நடித்த நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு தேசிய விருது கிடைத்தது. இதனால், ஹரிஷ் கல்யாணின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் இடையே காணப்பட்டது. இந்த சூழலில், அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமியின் டீசல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பதாக செய்தி வெளியானது. குறிப்பாக, திபு நினன் தாமஸ் இசையில் இப்படத்தின் பாடல்கள் வைரல் ஹிட்டாகின. இதனால், இப்படம் மீது பலரது கவனமும் திரும்பியது.

மேலும் படிக்க: Bison OTT Release Date: மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படத்தை எந்த ஓடிடி தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

டீசல் திரைப்படத்தின் கதைச்சுருக்கம்:

 

இப்படத்தின் கதை 1970-80 காலகட்டத்தில் தொடங்குகிறது . அந்த நேரத்தில் மீனவ பகுதியில் கச்சா எண்ணெய் திருட்டு, டீசல் மாஃபியா மூலமாக உருவாகும் பகை, அதனை நாயகன் எவ்வாறு எதிர்கொண்டார் என்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. முக்கியமாக, இந்த திரைப்படத்தில் தான் ஹரிஷ் கல்யாண் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார். முன்னதாக, பியார் பிரேமா காதல், தாராள பிரபு என காதல் திரைப்படங்களில் நடித்து வந்த ஹரிஷ் கல்யாண், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் சில சண்டைக் காட்சிகளில் மாஸ் காட்டினார்.

மேலும் படிக்க: Girija Oak: யார் இந்த கிரிஜா ஓக்? திடீரென இணையத்தில் ட்ரெண்டாகும் நடிகை

 

அந்த வகையில், தனது முந்தைய திரைப்படங்களின் சாயல் இல்லாமல் இந்தத் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்தார். மேலும், மீனவ பகுதியில் வாழும் இளைஞராக நடிக்க வேண்டி இருந்ததால், அப்பகுதி மக்களிடம் அவர்களின் வாழ்வியல் குறித்து கேட்டறிந்து சில பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் ஹரிஷ் கல்யாண் நேர்காணல் ஒன்றில் கூறி இருந்தார். இதனால், இப்படம் மாறுபட்ட கோணத்தில் ஆக்‌ஷன் கலந்து இருக்கும் என்று பார்வையாளர்கள் இடையே கருத்து நிலவியது.

தீபாவளியை முன்னிட்டு வெளியான டீசல் திரைப்படம்:

 

இந்நிலையில், தீபாவளி வெளியீடாக பைசன், ட்யூட் ஆகிய திரைப்படங்களுடன் இணைந்து டீசல் திரைப்படமும் வெளியானது. ஆனால், மக்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், வசூல் ரீதியாகவும் பைசன், ட்யூட் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன. எனினும், டீசல் திரைப்படத்தை ஓடிடியில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இது தவிர கடந்த வாரம் ட்யூட் திரைப்படம் ஓடிடியில் வெளியானதால், டீசல் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியும் விரைவாக அறிவிக்கப்படும் என்று கருதப்பட்டது.

 

டீசல் ஓடிடி ரிலீஸ்:

 

இந்த சூழலில் டீசல் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 21-ஆம் தேதி சன் நெக்ஸ்ட் (Sunnxt), ஆஹா தமிழ் (AhaTamil), சிம்ப்ளி சௌத் (SimplySouth) ஆகிய ஓடிடி தளங்களில் டீசல் திரைப்படம் வெளியாகிறது. மேலும், ப்ரைம் வீடியோ (Primevideo) ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனினும், சிம்ப்ளி சௌத் (SimplySouth) ஓடிடி தளத்தில் இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் இப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியான போது இப்படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், ஓடிடி வெளியீட்டின் போது டீசல் திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே வரவேற்பு இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com