herzindagi
image

New Tamil OTT Releases: ஹார்ட்டிலே பேட்டரி முதல் உன் பார்வையில் வரை; இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்

OTT Releases This Week: இந்த வாரத்தில் ஓடிடியில்  வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் தொகுப்பை இந்தக் குறிப்பில் காணலாம். இவற்றில் சில மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் மற்றும் சீரிஸ்களும் அடங்கும்.
Editorial
Updated:- 2025-12-16, 13:54 IST

Tamil OTT Releases: ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்தில் வெளியாகும் சில முக்கியமான வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்கள் என்னவென்று காணலாம்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள்:

 

திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்கள் வெளியாகும் என்று நிலவிய சூழல் இன்றைய காலகட்டத்தில் மறைந்து விட்டது. ஓடிடி தளங்களில் சில திரைப்படங்கள் நேரடியாக வெளியாகின்றன. இவற்றில் சில திரைப்படங்கள் மக்கள் ஆதரவை பெறுகின்றன. அதன்படி, இந்த வாரமும் ஒரு திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் படிக்க: Karuppu Movie Update: கருப்பு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்; சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி 

 

உன் பார்வையில் ஓடிடி வெளியீடு:

 

அந்த வகையில், உன் பார்வையில் என்ற தமிழ் திரைப்படம் சன் நெக்ஸ்ட் (Sunnxt) ஓடிடி தளத்தில் டிசம்பர் 19-ஆம் தேதி நேரடியாக வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் பார்வதி நாயர், கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்கள் இடையே வரவேற்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க: Jio Hotstar South Unbound: தென்னிந்திய அளவில் ஜியோ ஹாட்ஸ்டார் மாபெரும் திட்டம்; புதிய திரைப்படங்கள், சீரிஸ்களுக்காக ரூ. 4000 கோடி முதலீடு

 

ஹார்ட்டிலே பேட்டரி ஓடிடி வெளியீடு:

 

இந்த வரிசையில் ஹார்ட்டிலே பேட்டரி (Heartliey Battery) என்ற வெப் சீரிஸ் இடம்பெற்றுள்ளது. ரொமான்ஸ் காமெடி பாணியில் உருவாகி இருக்கும் இந்த வெப் சீரிஸில் குரு லட்சுமன் மற்றும் பாடினி ஆகியோர் நடித்துள்ளனர். இளைஞர்களை கவரும் வகையில் காதல் மற்றும் காமெடியில் உருவாகி இருக்கும் இந்த வெப் சீரிஸ், ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று (டிசம்பர் 16) வெளியாகி இருக்கிறது. இந்த வெப் சீரிஸ் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபார்மா ஓடிடி வெளியீடு:

 

மலையாளத்தில் உருவாகி இருக்கும் இந்த வெப் சீரிஸை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமம் திரைப்படத்தின் மூலம் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நிவின் பாலி, இந்த வெப் சீரிஸில் நாயகனாக நடித்திருக்கிறார். மருத்துவ துறையின் பின்னணியில் த்ரில்லர் பாணியில் இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ராத் அகேலி ஹை - தி பன்சால் மர்டர்ஸ் (Raat Akeli Hai -The Bansal Murders):

 

நவாசுதீன் சித்திக், ராதிகா ஆப்தே, ரேவதி ஆகியோர் நடித்துள்ள இந்த இந்தி திரைப்படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என்று கருதப்படுகிறது. பன்சால் குடும்பத்தில் நடந்த கொலை வழக்கை விசாரிக்கும் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், டிசம்பர் 19-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

 

அந்த வகையில், இந்த வாரம் ஓடிடி சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ்கள் வெவ்வேறு பாணியில் இருப்பதால் பலதரப்பட்ட பார்வையாளர்களை கவரும் என கருதப்படுகிறது. இவை மட்டுமின்றி, மேலும் சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் வெளியீடு விரைவில் அறிவிக்கப்படக் கூடும். இதனால் தமிழ் மட்டுமின்றி பல சினிமா ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com