
New Tamil Ott Releases This Week: ஜியோஹாட்ஸ்டார், ஜி5 ஆகிய ஓடிடி தளங்களில் பேட் கேர்ள், கிஸ் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. இப்படங்களை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
வர்ஷா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பேட் கேர்ள். இந்த திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். முன்னதாக, இயக்குநர் வெற்றிமாறனிடம் வர்ஷா உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ரம்யா என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அரங்கேறும் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு, விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
She's not your regular good girl, #BadGirl streaming now ▶️
— JioHotstar Tamil (@JioHotstartam) November 3, 2025
▶️ https://t.co/XV9XWW7tEc#BadGirl now streaming only on JioHotstar #BadGirlNowStreaming #BadGirlOnJioHotstar #JioHotstar #JioHotStarTamil @varshabharath03 #VetriMaaran@ItsAmitTrivedi @AnuragKashyap72… pic.twitter.com/kzmaDze2nd
இதனால், பேட் கேர்ள் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது என ரசிகர்கள் இடையே கேள்வி எழுந்தது. அந்த வகையில், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அக்டோபர் 4-ஆம் தேதியான இன்று பேட் கேர்ள் திரைப்படம் வெளியாகி உள்ளது. ஓடிடி வெளியீட்டில் இப்படத்திற்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே உருவாகி இருக்கிறது.
மேலும் படிக்க: Kantara Chapter 1 OTT release: ஓடிடியில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
சதீஷ் இயக்கத்தில், கவின், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடிப்பில் ஃபேன்டசி ரொமான்டிக் காமெடி திரைப்படமாக கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி கிஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த போதிலும், வசூல் ரீதியாக இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Ellarukum oru #Kiss parcel...💋
— ZEE5 Tamil (@ZEE5Tamil) October 30, 2025
Watch Kavin's romantic blockbuster movie #Kiss Premieres on Nov 7th Only On ZEE5! ❤️@Kavin_m_0431 @mynameisraahul @dancersatz @preethioffl @JenMartinmusic @dop_harish @SureshChandraa @peterheinoffl #MohanaMahendiran @editorrcpranav… pic.twitter.com/8MGb7sxb4B
எனினும், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக பலரும் காத்திருந்தனர். அதனடிப்படையில், நவம்பர் 7-ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் கிஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஓடிடி வெளியீட்டின் போது கிஸ் திரைப்படம் கவனம் ஈர்க்கும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இது தவிர நவம்பர் 5-ஆம் தேதி தி ஃபென்டாஸ்டிக் ஃபோர் (The Fantastic Four) என்ற ஆங்கில திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதன்படி, இந்த வாரம் ஓடிடி சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com