ஓடிடி வருகைக்கு பின்பு சினிமா துறை இன்னும் பரந்து விரிய தொடங்கி விட்டது. சிறிய பட்ஜெட் படங்கள் நேரடியாக ஓடிடியில் ரீலிஸ் செய்யப்படுகின்றன. அதுமட்டுமில்லை மற்ற மொழிகளில் வெளிவந்த சிறந்த படங்களையும் நேரம் கிடைக்கும் போது பார்க்கும் வாய்ப்பு ஓடிடியில் உள்ளது. படங்களை தாண்டி வெப் சீரிஸூம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறுகின்றன. 2 மணி நேரம் படமாக எடுக்க முடியாத கதைகள், கைவிடப்பட்ட கதைகள், தியேட்டரில் ரிலீஸ் செய்யமுடியாத படங்கள் இப்படி பல கதைகள் வெப் சீரிஸாக எடுக்கப்பட்டு ஓடிடியில் வெளியாகின்றன.
அந்த வகையில் தமிழில் இதுவரை வெளியான சிறந்த வெப் சீரிஸ் தொடர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்:நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்
சுழல்
விக்ரம் - வேதா புகழ் புஷ்கர்-காய்த்ரி எழுத்தில் கடந்த ஆண்டு அமேசான் ப்ரைமில் சுழல் வெப் சீரிஸ் வெளியானது. பார்பவர்களுக்கு மிகச் சிறந்த த்ரில்லர் அனுபவத்தை தரக்கூடிய இந்த சீரிஸில் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, ரவி, கதிர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். நெருங்கிய உறவுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை கண்முன் நிறுத்தி, சமுதாயத்தில் பெற்றோர்கள் துணை குழந்தைகளுக்கு எவ்வளவு அவசியம் என்பதை புரிய வைக்கும் கதை.
அனந்தம்
ஒரு வீடு அந்த வீட்டில் வந்து தங்கும் குடும்பங்களின் கதை தான் அனந்தம். இதுவரை பார்த்திடாத ஒரு வித்தியாசமான கதை தொடரை திரையில் காட்டி ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளினார் இயக்குனர் பிரியா. இந்த தொடரை பார்ப்பவர்கள் வாய்விட்டு சிரிக்கலாம், அழுவலாம், தவறை உணரலாம், குடும்பத்தை நேசிக்கலாம். முழுக்க முழுக்க பாசிடிவ் வைப் தரக்கூடிய வெப் தொடர் அனந்தம். ஜீ5 ல் இந்த தொடரை காணலாம்.
லைவ் டெலிகாஸ்ட்
இயக்குனர் வெங்கட் பிரபு கதையில் வெளியான ஹாரர் பிளஸ் சஸ்பென்ஸ் வெப் தொடர் லைவ் டெலிகாஸ்ட் . காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்தனர். வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க நல்ல வெப் தொடர் லைவ் டெலிகாஸ்ட். இதை ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
நவம்பர் ஸ்டோரி
நடிகை தமன்னா நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியான வெப் தொடர் நவம்பர் ஸ்டோரி. இதுவரை தமிழ் சினிமாவில் பேசப்படாத பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவரின் மனநிலை குறித்து ஆழமாக பேசுகிறது இந்த வெப் தொடர். தனது தந்தைக்காக கொலையாளியை கண்டுப்பிடிக்கும் பணியில் இறங்கும் தமன்னா என பல ட்விஸ்டுகளுடன் பயணிக்க கூடிய சிறந்த வெப் தொடர் நவம்பர் ஸ்டோரி.
வதந்தி
எஸ்.ஜே சூர்யா, லைலா நடிப்பில் சமீபத்தில் வெளியான வதந்தி தொடர் பல பாராட்டுக்களை அள்ளியுள்ளது. ஒரு பெண்ணின் கொலை, அதில் இருக்கும் மர்மம் இதை சுற்றியே கதை நகர்கிறது. போலீஸ் ரோலில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்:கதையின் நாயகி.. ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி பயணம்!
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation