சினிமாவில் தற்போதைய தேவை, கதாநாயகன் அல்ல, கதையின் நாயகன் தான். கதை சுமாராக இருந்தாலும் பரவாயில்லை ஹீரோவை வைத்து படத்தை ஓட்டிவிடலாம் என நினைத்த காலமெல்லாம் மலை ஏறி போச்சு. கதைக்கு தேவையான நாயகன் இருந்தால் போதும், சின்ன ஹீரோக்கள், அறிமுக ஹீரோக்களை வைத்து கூட ஹிட் கொடுத்துவிடலாம் என்ற நிலைமை தற்போது வந்து விட்டது. இப்படி வரும் படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று பல மாற்றங்களை சினிமாவில் கொண்டு வருகின்றன. இது ஹீரோக்களுக்கு மட்டுமில்லை. ஹீரோயின்களுக்கும் பொருந்தும்.
ஹீரோவுடன் டூயட் பாட ஒரு நாயகி தேவை என்ற நிலைமை மாறி, இப்போது ஹீரோயின்களை லீட் ரோலில் நடிக்க வைக்கும் நிலை வந்துவிட்டது. கண்டிப்பாக இது வரவேற்கக்கூடிய ஒன்று. நயன்தாரா, சமந்தா, ஜோதிகா போன்ற நடிகைகள் தொடர்ந்து இந்த பாணியை கையாளுகின்றனர். இவர்கள் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷூம் மிக மிக முக்கியமானவர்.
இந்த பதிவும் உதவலாம்:விக்ரம் பட ஏஜெண்ட் டீனா பற்றி பலருக்கும் தெரியாத சுவாரசிய கதை
அழுத்தமான கதாபாத்திரம், அதிகம் கவனிக்க வேண்டிய கதாபாத்திரம் என்றால் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஐஸ்வர்யா ராஜேஷ் தான். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர், தனது நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.
கலைஞர் தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான மானடா மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஐஸ்வர்யார் ராஜேஷ். அந்த நிகழ்ச்சியின் ஃபைனல்ஸில் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கினார். அந்த சமயத்தில் அவர் அண்ணனும் உயிரிழந்தார். ஆனால் எல்லாவற்றையும் கடந்து வந்து, தனது பெஸ்டை கொடுத்தார்.
அந்த வெற்றிக்கு பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்பு தேட தொடங்கினார். ஆரம்பத்தில் இவர் டஸ்கி ஸ்கின் டோன் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாம், ஆனால் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் கெரியரை வேற லெவலில் உயர்த்தியது. அதன் பின்பு வெளிவந்த தர்மதுரை, கனா, க.பெ ரணசிங்கம், வட சென்னை போன்ற படங்களில் நேர்த்தியன நடிப்பை தந்து கலக்கினார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தொடர்ந்து இதுப்போன்ற நல்ல படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் தேர்ந்தெடுத்து நடிப்பார் என அவரின் ரசிகர்கள் நம்புகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்:மிஸ் செய்யக்கூடாத சிறந்த தமிழ் வெப் சீரிஸ்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com