புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வந்தவர். கமல்ஹாசன், அஜித், விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார். தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கும் சினேகா திருமணம், குழந்தைகள் ஆன பின்பும் வெள்ளத்திரை, சின்னத்திரை இரண்டிலும் பிஸியாக வலம் வருகிறார். அவரின் கணவர் பிரசன்னாவும் வெள்ளித்திரையில் பயங்கர பிஸி. வில்லன் ரோல், குணச்சித்திர வேடம் என தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கோலிவுட்டில் நடிகர் - நடிகைகளின் விவாகரத்து விவகாரம் காரசாரமாக பேசப்பட்டு வந்த போது அதில் சினேகா - பிரசன்னா பெயரும் அடிப்பட்டது.
ஆனால் ரசிகர்கள் இதை நம்ப மறுத்தனர். இணையத்தில் இதுக் குறித்த பேச்சுக்கள் காட்டுத்தீ போல் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சினேகா பிரசன்னாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக விவாகரத்து பேச்சு வதந்தியே என புரிய வைத்தார். இருப்பினும் இணையதளங்களில் இதுக் குறித்த பேச்சுகள் இன்றளவும் ஓயாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சினேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரச்சனாவுடன் இருக்கும் மற்றொரு ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அண்மையில் சினேகா - பிரசன்னாவின் மூத்த மகன் விகானின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சினேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லை அந்த புகைப்படத்துடன் சில வரிகளையும் சினேகா பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்:நடிகை சமந்தாவுக்கு வந்திருக்கும் நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு!
“உங்களால் மாற்ற முடியாததை கைவிடுவதற்கான தைரியத்தை கண்டறிவது வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும்” என குறிப்பிட்டு பிரச்சனாவுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ரசிகர்களுக்கு சினேகா, பிரசன்னா மீது வைத்திருக்கும் காதல் வெளிப்படையாகவே தெரிய வந்துள்ளது. விவாகரத்து வதந்தி வெறும் வதந்தியே என்பதை சினேகா மீண்டும் சொல்லாமல் சொல்லிவிட்டார். எனவே, அவரின் ரசிகர்கள் பயங்கர ஹேப்பி. அதுமட்டுமில்லை சினேகா இந்த புகைப்படத்தில் கொள்ளை அழகில் ஜொலிக்கிறார். வழக்கம் போல் அழகான சிரிப்பால் ரசிகர்களை கவர்கிறார். சினேகாவின் இந்த புகைப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி கமெண்டுகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த பதிவும் உதவலாம்:பேலியோ டயட்டால் உயிரிழந்த பிரபல நடிகரின் மனைவி; ஆபத்தானதா பேலியோ டயட்?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com