தியேட்டர் ரிலீஸூக்காக காத்திருந்த நாட்கள் மாறி இப்போது ஓடிடி ரிலீஸூக்காக காத்திருக்கும் நாட்கள் வந்து விட்டன. திரையில் படங்களை பார்க்க தவற விட்டவர்கள் வீட்டில் இருந்தப்படியே ஓடிடியில் படத்தை பார்க்கின்றனர். வார இறுதி நாட்களில் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களை பார்த்தப்படியே குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து பலரும் விடுமுறை நாட்களை கழிக்கின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளன. அதுக் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். கவினின் சூப்பர் டூப்பர் ஹிட்டான டாடா திரைப்படம் தொடங்கி பொம்மை நாயகி, ரன் பேபி ரன் என முக்கியமான பல படங்கள் இந்த வாரம் ஓடிடி பிளார்ஃபார்மில் ரிலீஸாகியுள்ளன.
இந்த பதிவும் உதவலாம்:நடிகை அனிகா விக்ரமனை கொடூரமாக தாக்கிய காதலன்
கவின் அபர்ணா தாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டாடா திரைப்படம் பாராட்டுக்களை அள்ளியது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தை இளைஞர்கள் கொண்டாடினர். இந்நிலையில் இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
யோகிபாபு நடிப்பில் வெளியான பொம்மை நாயகி திரைப்படம் பலரையும் கலங்க வைத்தது. விமர்சனம் ரீதியாக பெரும் வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ரன் பேபி ரன்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் படமான இது உங்கள் விருமுறையை நேரத்தை சிறப்பானதாக மாற்றும்.
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற மம்மூட்டியின் கிறிஸ்டோஃபர் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
மேத்யூ தாமஸ், மாளவிகா மோகனன் நடித்துள்ள கிறிஸ்டி திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
வைபவ், ரம்யா பாண்டியன் நடித்துள்ள ‘ஆக்சிடன்டல் ஃபார்மர் அன்ட் கோ’ சோனி லைவில் வெளியாகியுள்ளது. ‘யூ’ தொடரின் 4ம் சீசனின் இரண்டாவது பாகம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்:புடவையில் செம்ம அழகு! இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபோட்டோ ஷூட்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com