புடவையில் செம்ம அழகு! இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபோட்டோ ஷூட்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ராயல் நீல நிற புடவையில் சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தேவதை போல் ஜொலிக்கிறார். 

aiswarya rajesh movies

டஸ்கி பியூட்டியான ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். எல்லா படத்திலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும் இவர், கதையின் நாயகியாக இயக்குனர்களால் புகழப்படுகிறார். சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் வெளிவந்த ரன் பேபி ரன், கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா போன்ற படங்கள் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. வரும் வாரங்களில் இந்த படங்கள் ஓடிடியிலும் ரிலீஸாகவுள்ளன.

சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபேஷன் பலராலும் அதிகம் கவனிக்க கூடிய ஒன்றாக மாறியுள்ளது. மாடல், வெஸ்டர்ன், கிளாமர் என எல்லா தீம்களிலும் விதவிதமான ஃபோட்டோஷூட் நடத்தி கலக்கி வருகிறார். இதுவரை ஐஸ்வர்யா ராஜேஷை இந்த லுக்கி பார்க்காத ரசிகர்கள் ஃபோட்டோஸ்களுக்கு லைக்ஸ்களை வாரி வழங்குகின்றனர்.

actress aiswarya rajesh

இந்நிலையில் சமீபத்தில் பிரபல கடை திறப்பு விழா ஒன்றுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார். ராயல் நீல நிற பன்சாரி பட்டு புடவையில், லைட் மேக்கப்பில் அவரின் லுக் பார்ப்பவர்களின் கண்களையும் ஈர்த்தது. ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் டிசைனில் ஐஸ்வர்யா ராஜேஷ் தேவதையாய் ஜொலித்தார். அதே லுக்கில் மினி ஃபோட்டோஷூட் ஒன்றையும் நடத்தி முடித்தார்.

அந்த புகைப்படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டார். அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. அதுமட்டுமில்லை, ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இந்த லுக்கு கச்சிதமாக பொருந்துவதாகவும் ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்:நடிகை அனிகா விக்ரமனை கொடூரமாக தாக்கிய காதலன்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP